Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

தனியாக தவிக்கின்றேன் - Part 2 - Tamil Gay Sex Story

தனியாக தவிக்கின்றேன் - பகுதி 1 யைப் படித்து விட்டுத் தொடரவும்
 
தனியாக தவிக்கின்றேன் - பகுதி 2
 
இன்று:

அவர் தன் அன்னையிடம் என்னை பற்றி கூறியிருப்பார் என்று எனக்கு தெரிந்திருந்தாலும் என்னை அவர் நினைவு வைத்து எனக்கு அவர் ஆறுதல் கூறியது எனக்கு மிகுந்த மனத்தெம்பை அளித்தது.நானும் அவரிடம் சாந்தமாக ஒன்றும் நடக்காது அவர் மீண்டு வருவார் அம்மா என்றேன்.அவர் எப்படி இருக்கிறார் அம்மா என்று வினவியதும் அழத்தொடங்கி விட்டார்கள்.அவரின் கண்ணீரைக்கண்டதும் எனக்கும் கண்ணீர் தளும்பியது.
பெரியவர் இப்பொழுது எங்கள் பக்கம் வந்து இருவரையும் விலக்கி விட்டு தம்பி இங்கே வாருங்கள் என்று தனியாக அழைத்து சென்று என் மகன் கடைசியாக உன்னிடம் பேசியதாகத்தான் போலீசில் சொல்கிறார்கள் என்ன பேசினான்? அதற்கு பின் என்ன நடந்தது என்று கேட்கவும் ஒரு நொடி என் மூச்சு நின்று போனது.
 
அன்று:

நான் கேட்ட தொனி அவரை அதிகமாக உசிப்பி விட்டது போலும். முதன் முறையாக ஒருமையில் என்னை என் பெயர் சொல்லி அழைத்தார். நீ உன் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்றார்.நான் ஒரு புன்னகையுடன் மனதில் நினைப்பதை எல்லாம் சொல்லிவிட முடியுமா சார் என்று ஒரு குதர்க்கமாக பதில் சொன்னேன்.அவருக்கு இருப்பு கொள்ளவில்லை என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு என்னை ப்ளீஸ் டேக் யுவர் சீட் என்றார். தேன்க் யூ என்றவாறே சிரித்துக்கொண்டே அமர்ந்தேன். எனக்கே தெரிந்தது நான் அவரை அதிகமாக சோதிக்கிறேன் என்று இருந்தாலும் இந்த விளையாட்டு எனக்கு பிடித்திருந்தது.அவர் என்னிடம் நீங்கள் இரண்டு தினங்கள் விடுப்பு எடுத்தது எனக்கு தெரிவித்தாகி விட்டது அதற்கு தான் வந்தீர்கள் என்றால் நீங்கள் போகலாம் என்றார். அப்பொழுது நாம் மும்பை போக வில்லையா சார் என்றே குறும்புடன் கேட்டேன்?ஒரு நிமிடம் திகைத்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அவர் நெளிநதது எனக்கு நன்றாக தெரிந்தது.அவரின் வழக்கமான புன்னகை மெதுவாக எட்டிப்பார்த்தது.ஆர் யூ மேகிங் ஃபன் ஆன் மீ என்றார். டெஃபினட்லி நாட் நொவ் சார் என்றே பொடி வைத்து பேசினேன்.சட்டென்று சிரித்து விட்டார். இன்னும் எத்தனை நேரம் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்றார்.புரியலை சார் என்று சொல்லி மீண்டும் வெறுப்பேத்தினேன்.ஏதோ அவர் முனகியது கேட்டது.நீங்கள் வராத கோபத்தில் மேலாளரையும் உபதலைவரையும் மும்பைக்கு செல்ல ஆயுத்தமாக சொல்லியிருக்கிறேனே என்றார். அப்பாடா அப்போ நான் தப்பித்தேனா நாம போகலியா என்று கேட்க என்னை எரித்து விடுவது போல் ஒரு பார்வை பார்த்து விட்டு காரியதரிசியை அழைத்து மேலாளரை வரச்சொன்னார். என்னை கண்ட மேலாளர் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தார்.உங்கள் இருவருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்தாகிவிட்டதா? என்று வினவினார். இன்னும் இல்லை சார் என்றார் அவர் பணிவுடன்.நல்லவேளை எங்கள் இருவருக்கும் சனிக்கிழமை காலை ஸ்பைஸ் ஜெட்டில் முன்பதிவு செய்து விடும்படி உத்தரவிட்டார்.என்னை நன்றியுடன் பார்த்தார் மேலாளர்.நான் அதிர்ச்சியுடன் சார் நானும் உங்களுடனா வருகிறேன் என்றதும் என்னுடன் தான் அந்த இரு தினங்களும் உங்கள் அலுவல் என்று கூறி ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தார்...
 
இன்று:

நான் அழ்ந்த உறக்கத்தில் இருக்கிறேன்..இது என்ன உலகம் என்று தெரியவில்லை விதவிதமான சப்தங்கள், ஆழ்மனதில் மட்டும் என்னவனின் நினைவுகள் அது என்னை எங்கோ கட்டி போட்டது போன்று ஒரு அழுத்தம்.அந்த பிடியிலிருந்து விலகமுடியவில்லை அந்த வினோத சப்தங்கள் என்னை அழைப்பது போன்று ஒரு எண்ணம்.அது பிரமையா இல்லை நிஜமா என்று தெரியவில்லை.ஆனால் அங்கு போவதற்கு என் மனம் விரும்பவில்லை என்னவனின் நினைவுகள் என்னை அங்கு நோக்கி போகாதவண்ணம் என் மனதை சிதறடிக்கிறது,மனம் பின்னோக்கி மும்பையின் நிமிடங்களை அசை போடுகிறது.எல்லோர் வாழ்விலும் சில நிமிடங்களை ஆயுசு முழுக்க மறக்க முடியாது எனக்கும் அப்படி தான் அந்த மும்பையில் நாங்கள் கழித்த ஒவ்வொரு நிமிடங்களும். அதை நினைக்கும் பொழுதே என் மனம் புத்துணர்வு அடைகிறது முகத்தில் புன்முறுவல் விரிகிறது.
 
அன்று:

என்னுடைய உணர்ச்சிகளில் இவன் அதிகமாக தான் விளையாடுகிறான் என்பது எனக்கு புரிந்தது.ஆனாலும் அவன் போக்கிலே நானும் போக விரும்பினேன். ஆர் யூ மேகிங் ஃபன் ஆன் மீ என்றேன். டெஃபினட்லி நாட் நொவ் சார் என்றே பொடி வைத்து பேசினான்.சட்டென்று சிரித்து விட்டேன். இன்னும் எத்தனை நேரம் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என்றேன்.புரியலை சார் என்று சொல்லி மீண்டும் வெறுப்பேத்தினான்.மனதிற்குள் நீ மும்பை வா உன்னை ஒரு வழி செய்கிறேன் என்று முனகியது அவனுக்கு கேட்டதா என்று தெரியவில்லை.நீங்கள் வராத கோபத்தில் மேலாளரையும் உபதலைவரையும் மும்பைக்கு செல்ல ஆயுத்தமாக சொல்லியிருக்கிறேனே என்றேன். அப்பாடா அப்போ நான் தப்பித்தேனா நாம போகலியா என்று என்னை பார்த்து கேட்க நான் அவனை எரித்து விடுவது போல் ஒரு பார்வை பார்த்து விட்டு காரியதரிசியை அழைத்து மேலாளரை வரச்சொல்லி உங்கள் இருவருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்தாகிவிட்டதா? என்று வினவினேன். இன்னும் இல்லை சார் என்றார் அவர் பணிவுடன்.நல்லவேளை, எங்கள் இருவருக்கும் சனிக்கிழமை காலை ஸ்பைஸ் ஜெட்டில் முன்பதிவு செய்து விடும்படி உத்தரவிட அவரோ அவனை நன்றியுடன் பார்த்தார்.அவன் அதிர்ச்சியுடன் சார் நானும் உங்களுடனா ப்ளைட்டில் வருகிறேன் என்றதும் என்னுடன் தான் அந்த இரு தினங்களும் உங்கள் அலுவல் என்று கூறி ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தேன்...அந்த கண்ணாமூச்சி விளையாட்டு எனக்கும் பிடித்தே இருந்தது. அவனின் பார்வையில் ஒரு மிரட்சியும் அதே நேரம் ஒரு சிலிர்ப்பும் தெரிந்தது.சனிக்கிழமை காலை நம்முடைய பிரயாணம் துவங்குகிறது என்று சொல்லவும் அவனின் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்ததை கண்டேன்.இன்னும் இரு தினங்கள் கழிந்தால் அவன் என்னவன் ஆவானா? என்று மனம் ஏங்கியது.அந்த இரு தினங்களும் பல பல கனவுகளுடன் கழித்தேன். சனிக்கிழமை காலையிலேயே அவனுக்கு வண்டி அனுப்ப சொல்லியிருந்தேன் ஏர்போர்ட்டிற்கு வெளியில் என் வண்டியில் காத்திருக்கவும் அவனை சுமந்து கொண்டு அலுவலக வண்டி வந்தது வண்டியில் இருந்து இறங்கிய அவன் எனக்கு மன்மதனாகவே தெரிந்தான். உணர்சிகளை மிகவும் கட்டுபடுத்தி அவன் அருகில் சென்று ஷால் வி கோ என்றேன்.என்னை கண்ட அவனின் முகத்திலும் சில ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தது போலும் ஷுவர் சார் என்றான்.இருவருமாக செக் இன் செய்து கொள்ள விரைந்தோம்.
 
இன்று:

எதற்காக உன்னை என் மகன் கடைசியாக கூப்பிட்டான் என்று அவர் தந்தை என்னிடம் கேட்டதும் ஒரு நிமிடம் எனக்கு மூச்சு நின்று போனது.என்ன சொல்வது என்று புரியவில்லை “பே” என்று முழித்தேன்.நல்ல வேலையாக உதவிக்கு மருத்துவர் வந்தார் சார் ஒரு நிமிடம் உங்களிடம் பேசவேண்டும் என்று கூறி அவரை அழைத்து சென்றார்.அப்பாடா என்று பெருமூச்சு விடவும் அவரின் அன்னை மீண்டும் என்னருகில்.கத்தி போய் வாள் வந்தது என்பது இது தானா என்று நொந்தவாறே அவரை நோக்கினேன்.என்ன நினைத்தாரோ என்னவோ அல்லது என்ன புரிந்ததோ என்னவோ தம்பி அடுத்த முறை நான் உள்ளே செல்லும்போது என்னுடன் வா வந்து அவனை பார் உன் குரலோ அல்லது உன் அருகாமையோ அவனை ஏதாவது செய்கிறதா என்று பாப்போம் என்று சொல்லவும் என் கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் கொட்டியது.அவரை நன்றியுடன் நோக்கி கை கூப்பி தொழுதேன்.
 
அன்று:

முதன் முதலாக விமானத்தில் பயணம் என்பதே ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது அதிலும் இவருடன் பயணம் என்பது ஒரு எல்லையில்லா ஆனந்தத்தையும் தந்தது.அந்த இரு தினங்கள் விடுமுறை எடுத்ததால் அவரைப்பற்றிய சிந்தனைகள் குறைந்தேயிருந்தன.ஆனால் பிரயாணத்தன்று காலையிலே கிளம்பவேண்டி வந்ததும் மீண்டும் துள்ளலான அவரின் நினைவுகள் என் மனதில், அது சிறிது உற்சாகத்தையும் அதே நேரம் சிறிது படபடப்பையும் ஏற்படுத்தியது.நான் எதிர்பாராமலே அலுவலக கார் வந்திருந்தது என்னை அழைத்துச்செல்ல.ஏர்போர்ட் சென்றடைந்ததும் அவரை தேடினேன்.பின்னிருந்து ஷால் வி கோ என்றார் திரும்பிப்பார்த்த நான் ஒரு நிமிடம் அவரின் டிரஸ் சென்ஸ் கண்டு வியக்கவே செய்தேன். தடுமாறியபடியே ஷுவர் சார் என்றேன்.இருவருமாக செக் இன் செய்து கொள்ள விரைந்தோம்
மேய்ப்பனின் பின்னால் செல்லும் ஆட்டுக்குட்டியை போல அவரின் பின்னால் சென்றேன்.எங்கெங்கோ அழைத்து கடைசியாக விமானத்திற்கு கூட்டிச்சென்றார்.ஏதோ ஸ்டேஜ் ஏறப்போவது போல் இருந்தது விமான நுழைவு.விண்டோ சீட் வேண்டுமா என்றார் ஆம் என்பதை போல் தலை அசைத்தேன் நகர்ந்து இடம் கொடுத்து நான் அமர்ந்ததும் அவர் என் அருகில் அமர்ந்தார். இத்தனை பக்கத்தில் அவர், எனக்கு என்னவோ போல் இருந்தது அவரின் நறுமணம் என்னை கிறங்கடித்தது. ஆர் யு ஓகே என்றார் எஸ் என்று தலையாட்டினேன்.சீட் பெல்ட் போட உதவினார்.அவரின் ஸ்பரிசம் ஆண்டவா என்னை காப்பாற்று இவரிடம் இருந்து என்று கத்த வேண்டும் போல் இருந்தது.ஏகத்துக்கும் நெளிந்தேன்.விமானம் கிளம்பவும் அந்த ஜெர்க் சிறிது பயத்தை வரவழைத்தது அவர் என் கையை அழுத்தினார் நான் பயம் நீங்கி சிரித்தேன் பின் அந்த ஒரு மணி நேரமும் எனக்கு அதீத குதூகலத்தை அளித்தது இவரிடம் சிறு குழந்தை போல இது என்ன கடல் இது என்ன ஹெய்ட் இப்படி துருவி துருவி கொண்டே வந்தேன்.அந்த ஏர்ஹோஸ்ட்டஸ் கொண்டு வந்த அனைத்தையும் சகட்டுமேனிக்கு வாங்கி தின்றேன்.ஒரு வழியாக விமானம் மும்பையில் தரையிறங்கியது.மீண்டும் அவரின் பின்னால் ஆட்டுக்குட்டி போல் நான்.
 
இன்று:

மும்பை பற்றிய என் நினைவு எனக்கு எல்லையில்லா புன்னகையை வரவழைத்தது.நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை போன்றும் அவனின் நினைவுகள் எல்லாம் ஏதோ கனவுகளை போன்றும் உணர்ந்தேன்.சில நொடிகளில் மீண்டும் பல பல கூக்குரல்கள் அந்த குரல்கள் என்னை நிலைகொள்ளவிடவில்லை மிகவும் பரிதவித்தேன் எனக்கு தண்ணீர் தாகம் எடுத்தது என் உதடுகள் வறண்டு கிடக்கிறது எனக்கு யாரேனும் தண்ணீர் தர மாட்டார்களா? தாகத்தில் நாக்கு வறண்டது என்னால் எச்சில் கூட வரவழைக்க இயலவில்லை.தவிப்பு கோவமாக மாறியது வேகமாக கையை அசைக்க முயல்கிறேன்.ஆனால் வழக்கம்போல் என்னுடைய முயற்சிகள் வீணானது.இங்கு என்னை கவனிக்க யாரும் இல்லையா என்று சுயப்பச்சாதாபம் தோன்றியது.கண்கள் மீண்டும் கலங்கின..
 
அன்று:

என்னுடைய பின்னாலேயே வந்தான் தாய் பசுவிற்கு பின் வரும் கன்றுக்குட்டியை போல்.அனைத்து போர்மாலிட்டிகளையும் முடித்து அவனை விமானத்தினுள் அழைத்துச்சென்றேன்.அவனுக்கு இது தான் முதல் விமானப்பயணம் என்பதை உணர்ந்ததால் விண்டோ சீட் வேண்டுமா என்று அவனை கேட்கவும் வேகமாக தலையசைத்தான் நகர்ந்து இடம் கொடுத்தேன்.என்னருகில் என்னவன் எனக்கு என்னென்னவோ செய்தது இதற்கு தானே ஆசைபட்டாய் என்று என் மனம் என்னை கேலி செய்தது அதை புறந்தள்ளி விட்டு அவனையே பார்த்தேன்.அவனிடம் மெதுவாக ஆர் யு ஓகே என்றேன் எஸ் என்று தலையாட்டினான். அவனுக்கு சீட் பெல்ட் போட உதவினேன்.அவனின் ஆண்மை முழுவதுமாக உணர்ந்தேன் அவனின் மூச்சுக்காற்றின் உஷ்ணம் மூலமாக. இன்றும் நாளையும் என்னுடன் என்பதே எனக்கு தித்திப்பாக இருந்தது. ஃபிளைட் டேக் ஆப் ஆனதும் சிறிதாக குலுங்கினான் மெதுவாக அவனின் கையை அழுத்தினேன் சிரித்தான். அந்த சிரிப்பு என்னை சிதறடித்தது. பின் அந்த ஒரு மணி நேரமும் அவனின் அதீத குதூகலத்தை கண்டு ரசித்தேன் என்னிடம் சிறு குழந்தை போல இது என்ன கடல் இது என்ன ஹெய்ட் இப்படி துருவி துருவி கொண்டே வந்தான்.அந்த ஏர்ஹோஸ்ட்டஸ் கொண்டு வந்த அனைத்தையும் சகட்டுமேனிக்கு வாங்கி தின்றான்.ஒரு வழியாக விமானம் மும்பையில் தரையிறங்கியது.மீண்டும் அவனை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தேன். என் பெயர் பலகை தாங்கி கொண்டு ஒருவன் நின்றான்.எங்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வண்டி நேராக தாஜ் ஹோட்டல் சென்றது. ரிசெப்ஷனில் இருந்த பெண் எங்களின் தகவல்களை வாங்கிகொண்டு சார் உங்களுக்கு இரண்டு ரூம்கள் அல்லாட் செய்யப்பட்டுள்ளது என்றாள் நான் அவளிடம் எதற்கு இரண்டு ரூம்கள் வி கேன் அட்ஜஸ்ட் இன் எ சிங்கள் ரூம் என்றேன் அவன் இடைமறித்து இல்லை சார் எனக்கு தனியாகவே ஒரு ரூம் கொடுங்கள் என்றான். அவள் சார் தி ரூம்ஸ் ஹாவ் இன்சைட் என்ட்ரி என்றாள் அண்ட் போத் ஆர் நெக்ஸ்ட் டு ஈச் அதர் என்றாள்,எனக்கு கோபம் வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் இட்ஸ் ஓகே வென் இஸ் தி மீட் என்றேன். சார் தி மீட் இஸ் ஷெட்யூல்ட் போர் 10.30 என்றாள்.தேங்க்ஸ் சொல்லி இருவரும் அவரவர் ரூமிற்குள் நுழைந்தோம்.
 
இன்று:

என் கையை பிடித்து அவரின் அன்னை அழாதேப்பா எங்களின் வலியை போன்றது தான் உன்னதும் என்று எனக்கு தெரியும்.அவன் உன்னை பற்றி அவ்வளவு தூரம் என்னிடம் சொல்லியிருக்கிறான் உனக்கும் அவனை ரொம்ப மரியாதை என்று எனக்கு புரிகிறது.உன் குரல் கேட்டாலோ இல்லை உன் ஸ்பரிசம் பட்டோ அவனுக்கு நினைவு திரும்பலாம் என்று மீண்டும் கூறி என் கண்ணீரை அவரின் கைகள் கொண்டு துடைக்கப்போனார் நான் பதறி அவரின் கையை தடுத்து எனது கர்சீப் எடுத்து தொடைத்தேன்.மீண்டும் டாக்டர்கள் வர மாட்டார்களா என்று அந்த ஐ சீ யு வை நோக்கி கொண்டே இருந்தேன்.
 
அன்று:

விமானம் தரையிறங்கியதும் மும்பையின் பிரம்மாண்டத்தை கண்டு வியந்தேன்.அவரின் பெயர் பலகை தாங்கி கொண்டு ஒருவன் நின்றான்.எங்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வண்டி நேராக தாஜ் ஹோட்டல் சென்றது.பலமுறை டிவியில் மட்டுமே கண்ட ஹோட்டலில் நான் என்பதே வியப்பை தந்தது. ரிசெப்ஷனில் இருந்த பெண் எங்களின் தகவல்களை வாங்கிகொண்டு சார் உங்களுக்கு இரண்டு ரூம்கள் அல்லாட் செய்யப்பட்டுள்ளது என்றாள் அவரை பார்த்து.அவளிடம் அவர் எதற்கு இரண்டு ரூம்கள் வி கேன் அட்ஜஸ்ட் இன் எ சிங்கள் ரூம் என்றார். நான் இடைமறித்து இல்லை சார் எனக்கு தனியாகவே ஒரு ரூம் கொடுங்கள் என்றேன். அவள் சார் தி ரூம்ஸ் ஹாவ் இன்சைட் என்ட்ரி என்றாள் அண்ட் போத் ஆர் நெக்ஸ்ட் டு ஈச் அதர் என்றாள்,அவரின் முகத்தில் கோபம் தெரிந்தது போல உணர்ந்தேன் அவர் அவளிடம் இட்ஸ் ஓகே வென் இஸ் தி மீட் என்றார். சார் தி மீட் இஸ் ஷெட்யூல்ட் போர் 10.30 என்றாள்.தேங்க்ஸ் சொல்லி இருவரும் அவரவர் ரூமிற்குள் நுழைந்தோம்.ரூமை கண்ட நான் ஒரு நிமிடம் மெய்மறந்தே போனேன் அத்தனை பிரமிப்பு ஆனால் இருவரின் அறைகளுக்கும் உட்பக்கம் புகும் வழி மட்டுமே என்னை உறுத்தியது இருப்பினும் சில நொடிகளில் அதை மறந்தே போன நான் குளியலறைக்கு சென்று குளித்து விட்டு வெளியில் வரவும் என் ரூமில் அவர் அமர்ந்திருக்கிறார் என்னை அவர் குறுகுறு என்று பார்ப்பதாக தெரிந்தது அப்பொழுது தான் உரைத்தது நான் வெறும் துண்டை உடுத்திக்கொண்டிருந்தேன்.ஒரு நிமிடம் திடுக்கிட்டாலும் சார் வெயிட் இன் யுவர் ரூம் ஐ வில் பி ரெடி இன் பைவ் மினிட்ஸ் என்றதும் அவர் தயங்கி வெளியேறினார்.எனக்கு அவரை பார்த்து சங்கடம் தோன்றியது.அப்படி சொல்லியிருக்க கூடாதோ என்று தோன்றியது இருந்தாலும் நான் மிகவும் அன் கம்பர்டபில் ஆக பீல் செய்தது அவருக்கு புரிந்திருக்கும் என்றே நம்பினேன்.நான் உடைகளை மாற்றி அவரின் அறைக்குள் நுழைவதற்கு அடையாளமாக உள்கதவை ஒரு முறை தட்டி மே ஐ கம் இன் என்றேன்.எஸ் என்றவர் உன் அறைக்குள் வருவதற்கு முன் நானும் தட்டினேன் ஆனால் நீ குளித்துகொண்டிருந்ததால் என் சத்தம் கேட்டிருக்காது என்றார்.அவரின் குரலில் ஒரு கடுமையோ இல்லை ஏமாற்றமோ தெரிந்தது போல் எனக்கு தோன்றியது நான் பரவாயில்லை சார் மீட்டிங் போகலாமா சார் என்றேன் இன்னும் நேரம் இருக்கிறது சிறிது பேசலாம் உட்கார் என்றார் நான் ஒரு நிமிடம் யோசித்து அமர்ந்தேன் என்னை நோக்கி வந்தார்.......
 
இன்று:

கலங்கிய கண்களை தொடைக்கவும் யாரும் இல்லை என் மன போராட்டங்களை கண்டுகொள்ளவும் ஒருவரும் இல்லை.சுயபச்சாதாபம் இப்பொழுது சுயவெருப்பாக மாறியது. இந்த உலகமே வேண்டாமென்று தானே நான் இந்த விபத்தை தேடிக்கொண்டேன் இவர்களை யார் என்னை காப்பாற்றச்சொன்னது,எனக்கு எவரும் தேவையில்லை நான் என் வழி நோக்கி தானே செல்கிறேன் எல்லாவற்றுக்கும் மேலாக எவன் என்னவன் என்று எண்ணினேனோ அவனே அத்தகைய சொல்லை கேட்ட பின் எதற்கு இந்த வீண் முயற்சிகள் அனைத்து டியுப்களையும் அறுத்தெறிய என் கைகள் பரபரத்தது.வேகமாக அசைத்துப்பார்தேன் ஏதோ என் கையில் தட்டுப்பட்டதைப்போல உணர்ந்தேன்.......
 
அன்று:

என் ரூமிற்குள் சென்ற நான் சில நொடிகளில் தயாராகி அவனின் அறைக்குள் செல்ல அவன் கதவை மெதுவாக தட்டினேன். பதில் ஏதும் வர வில்லை மெதுவாக திறந்து எட்டிப்பார்த்தேன் அவனை அறையில் காணவில்லை பாத்ரூமில் இருந்து அவன் குளிக்கும் சத்தம் கேட்டது.திரும்பலாமா என்றெண்ணிய நான் அவன் வரட்டும் என்ன டிரஸ் போட வேண்டும் என்று சொல்லலாம் அவனுக்கு இது போன்ற மீட்டிங் புதிதல்லவா என்று அவனின் வரவுக்காக காத்திருந்தேன்.குளித்துவிட்டு வெறும் டவெல்லில் அவன் வெளியில் வந்தான் நான் இருப்பதை அவன் உணரவில்லை போலும். நான் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். அவனின் உடல் சந்தனத்தால் இழைத்தது போல் இருந்தது என்ன ஒரு தேகம் ஆண்மகனின் உண்மையான உதாரணம் இவன் தான் போலும் என்றெண்ணினேன். செதுக்கி வைத்த மன்மதனின் சிலையில் குறை காணலாம் இவனின் உடலில் குறை காண்பது கடினம் என்று வியந்தேன் என் குறுகுறு பார்வை அவனுக்கு உரைத்ததோ என்னவோ சட்டென்று திரும்பியவன் நான் இருப்பதைக்கண்டதும் என்ன நினைத்தானோ என்னவோ சார் வெயிட் இன் யுவர் ரூம் ஐ வில் பி ரெடி இன் பைவ் மினிட்ஸ் என்றான்.எனக்கு ஒரு நிமிடம் அந்நியனாக உணர்ந்தேன் நான் அவன் அறையில் இருந்தது தவறா? என்று எனக்குள் ஒரு விவாதம் நடைபெற துவங்கியது,இருபுறமும் எனக்கு எதிராக பேசினார்கள் நான் குற்றவாளி கூண்டில்.அப்பொழுது மே ஐ கம் இன் என்று அவன் என் அறையை தட்டினான்.எஸ் என்ற நான் உன் அறைக்குள் வருவதற்கு முன் நானும் தட்டினேன் ஆனால் நீ குளித்துகொண்டிருந்ததால் என் சத்தம் கேட்டிருக்காது என்று சிறிது கோபத்திலேயே கூறினேன்அவன் பரவாயில்லை சார் மீட்டிங் போகலாமா என்றான் இன்னும் நேரம் இருக்கிறது சிறிது பேசலாம் உட்கார் என்றவாரே அவனை நோக்கி நடந்தேன். அவன் அருகில் சென்றமர்ந்தேன் அவன் என்னருகில் மிக பக்கத்தில் இருந்தான்.குளித்து விட்டு வந்த அவனின் நறுமணமும் அந்த சோப்பின் மனமும் சேர்ந்து ஒரு கிறக்கத்தை எனக்கு தந்தது நான் நிலைதடுமாற போகிறேன் என்று எனக்கே தெரிந்தது அவன் சார் ஆர் யு ஆல்ரைட் என்று கேட்கவும் வெடித்து விடலாமா என்றெண்ணினேன். நினைப்பதை மட்டும் அனைவரும் சொல்லிவிடும் துணிவு வந்து விட்டால் எவருக்குமே இந்த தவிப்பின் சுகம் தெரியாமல் இருந்துவிடுவார் என்று தான் இந்த தயக்கத்தை ஆண்டவன் தந்திருக்கிறார் போலும்.தயங்கியபடியே அவனிடம் வாட் டூ யு தின்க் அபௌட் மீ என்றேன்? உண்மையை சொல்லட்டுமா சார் என்று பீடிகை போட்டான் சும்மா சொல் என்று படபடப்புடன் காத்திருந்தேன்.
 
இன்று:

ஐ சீ யு வை நோக்கி கொண்டே இருந்த நான் இதெற்கெல்லாம் நான் தான் காரணம் என்று இவர்களுக்கு தெரிந்தால் என்னாகும்.என்னை இதே போன்று ஆறுதல் சொல்லாமல் என்னுடைய ஒரே மகனை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டாயே என்று சபிக்க மாட்டார்களா?
ஆனால் இதெற்கெல்லாம் நான் தான் காரணமா?,அவர் தான் நான் சொல்வதை புரிந்து கொள்ளாமல் இப்படி செய்து விட்டார்,அவருக்கு முன்கோபம் அதிகம் தான் அது இந்தளவுக்கு கொண்டு செல்லும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை தெரிந்திருந்தால் அவரிடம் வேறு விதமாக பேசியிருப்பேன்.நான் மட்டும் தான் இப்படியா இல்லை எல்லாருமே இப்படி தானா? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்? அனைவருக்கும் ஒரு சந்தர்பத்திலாவது வரும் போல...
 
அன்று:

சிறிது பேசலாம் என்று சொல்லியவர் என்னருகில் வந்தமர்ந்தார்.மிகவும் ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்தார்.நான் அவரிடம் சார் ஆர் யு ஆல்ரைட் என்று தயங்கி தயங்கி கேட்டேன்,என் கேள்வி அவரை மேலும் தர்மசங்கடம் ஆகியதா என்று தெரியவில்லை ஆனால் அவர் என்னை நோக்கி வாட் டூ யு தின்க் அபௌட் மீ என்றார்? உண்மையை சொல்லட்டுமா சார் என்று பீடிகை கேட்டேன் சும்மா சொல் என்று படபடப்புடன் கேட்டார்.
உங்களின் அறிவுக்கும் அழகுக்கும் நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டியவர் என்று சொல்லவும் நீ என்னை நக்கல் தானே பண்ணுரே என்றார். பார்த்தீங்களா இப்ப தானே சொன்னேன் நீங்க பெரிய அறிவாளி சார் என்று சொல்லவும் அவர் என் காதை பிடித்து திருகினார். சார் விடுங்க சார் என் டிரஸ்லாம் கசங்கிட போகுது என்றேன்.அதுக்கு ஒரு வழி இருக்கு என்று அவர் சொல்லவும் ஆள விடுங்க சார் நாம மீட்டிங் போவோம் என்றேன். கண்டிப்பாக போகனுமா என்று என்னை நோக்கி பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்.ஆமா நான் அதுக்கு தான் வந்திருக்கிறேன் என்று அழுத்தமாக சொல்லவும் அவர் ஹலோ ஹல்லோ நாங்களும் அதுக்கு தான் வந்துருக்கிறோம் என்று சொல்லியவாரே வெளியில் வந்தார். மீட்டிங் ஹால் சென்றதும் தான் தெரிந்தது எத்தனை பெரிய பெரிய மனிதர்கள் மற்றும் பல தரப்பட்ட யூனியன் லீடர்கள் என்று ஆனால் நான் பார்த்த வரை அனைவருமே தங்கள் முதலாளிகளை ஒரு விரோதி போல தான் பாவித்தார்கள் மீட்டிங் மதிய உணவிற்கு பிரேக் விட்டதும் அவரை தேடினேன் அவர் யாருடனோ சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்,நான் மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடவும் ஹொவ் இஸ் தி மீட்டிங் என்று என்னருகே வந்தார் கொயிட் இன்றஸ்டிங் என்றேன். குட் மதியத்திற்கு மேல் இன்னும் நன்றாக இருக்கும் என்றார்.நாங்கள் இருவரும் நண்பர்களைப்போல பேசுவதைக்கண்ட பிற யூனியன் லீடர்கள் என்னை அதிசயமாக கண்டனர். அவர் நகர்ந்ததும் என்னை மொய்த்துக்கொண்டனர். நானும் அவரும் நண்பர்களா?சொந்தமா?வேறேனும் உறவா? என்று கேட்கவும் நான் இல்லை அவர் நல்ல மாதிரி யாரையும் தொழிலாளி மாதிரி ட்ரீட் பண்ண மாட்டார் என்றேன்.நீ ரொம்ப கொடுத்து வைத்தவன் என்றனர்.அவர்கள் சொல்வதும் ஒரு வகையில் உண்மை தான் என்றெண்ணினேன்.மதிய இடைவேளைக்கு பிறகு துவங்கிய கூட்டம் மாலை 6 மணி வரை நீண்டது. இரவு எட்டு மணிக்கு அனைவரும் டின்னர்க்கு சென்றோம். இட் வாஸ் எ ஹை கிளாஸ் பார்ட்டி அனைத்து வகை மதுபானங்களும் செர்வ் செய்யப்பட்டது. எனக்கு அந்த வாசனையே ஆகாது என்பதால் நேராக உணவருந்த சென்றுவிட்டேன்.நான் சாப்பிட்டு முடித்து இவரை தேடினால் இவர் இன்னும் கையில் கோப்பையுடன் நான் மெதுவாக அவரிடம் சென்று சார் போகலாமா என்றேன் இரு இரு இப்போ தான் மூணு ரவுண்டு முடிஞ்சிருக்கு என் லிமிட் ஐந்து என்றார் சார் வேண்டாம் நாளைக்கு மீட்டிங் இருக்கு என்றேன்.ஐ நோ ஸ்வீட் ஹார்ட் என்றார். அதோடு விடாமல் 5,6,7 என்று முன்னேறிக்கொண்டே இருந்தார்.ஒரு வழியாக அவரை சாப்பிட வைத்து ரூமிற்குள் நுழையவும் வ்வா என்று சத்தமிட்டு பாத்ரூமிற்குள் ஓடியவர் கதவை திறப்பதற்குள் அனைத்தையும் வாந்தி எடுத்தார் ரூம் சர்வீஸ் அழைத்து கிளீன் செய்ய சொல்லவும் சார் முப்பது நிமிடம் ஆகும் அவரை உங்கள் ரூமில் படுக்க வையுங்கள் சார் என்றார். அவர் சொல்வது தான் சரியாக பட்டது எனக்கும். வரை மெதுவாக இழுத்துக்கொண்டு வந்தேன் பெட்டை பார்த்ததும் தொப்பென்று அதில் சரிந்தார். அவரின் உடைகளை மாற்றி அவரை படுக்க வைத்தேன்,என் பெயரை சொல்லி அழைத்தார். நான் அருகில் சென்றதும் யு ஆர் சோ ஸ்வீட் டியர் ஐ லவ் யு என்றார். நான் திக்கித்து நிற்கவும் அவர் அப்படியே கண் மூடி தூங்கினார்,என் தூக்கம்?
 
இன்று:

ஏதோ என் கையில் தட்டுபட்டது போன்று உணர்ந்தேன் அது நிஜமா இல்லை பிரமையா என்று புரியவில்லை ஆனாலும் மெதுவாக அதை அசைத்திட முயன்றேன்.யாரோ என் பக்கம் ஓடி வந்தார்கள் சார் சார் என்று அழைத்தார்கள் நான் முனகினேன் அது அவர்களுக்கு கேட்டிருக்கும் போல டாக்டர் டாக்டர் என்று கூவியபடியே அந்த நர்ஸ் ஓடிப்போனாள்.எனக்கு நினைவு திரும்பிவிட்டது என்பதை சொல்ல ஓடினாளா என்று புரியவில்லை.அவர்கள் திரும்பிவரும் வரை எனக்கு இந்த சக்தி இருக்கவேண்டுமே என்று தோன்றியது.எனக்கு தூக்கம் வருவதை போன்றும் உணர்கிறேன் அதை நோக்கி செல்லவும் ஆசை ஆசையாக இருக்கிறது.
 
அன்று:

படபடப்புடன் காத்திருந்த என்னைப் பார்த்து உங்களின் அறிவுக்கும் அழகுக்கும் நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டியவர் சார் என்று சொன்னான். நீ என்னை நக்கல் தானே பண்ணுறே என்றேன். பார்த்தீங்களா இப்ப தானே சொன்னேன் நீங்க பெரிய அறிவாளி சார் என்று சொல்லவும் அவன் காதை பிடித்து திருகினேன். சார் விடுங்க சார் என் டிரஸ்லாம் கசங்கிட போகுது என்றான்.அதுக்கு ஒரு வழி இருக்கு என்று நான் சொல்லவும் ஆள விடுங்க சார் நாம மீட்டிங் போவோம் என்றான். கண்டிப்பாக போகனுமா என்று அவனை நோக்கி சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.ஆமா நான் அதுக்கு தான் வந்திருக்கிறேன் என்று அவன் அழுத்தமாக சொல்லவும் மெலிதாக எட்டிப்பார்த்த கோபத்துடன் ஹலோ ஹல்லோ நாங்களும் அதுக்கு தான் வந்துருக்கிறோம் என்று சொல்லியவாறே வெளியில் வந்தோம்.பல மீட்டிங்குகளை பார்த்திருந்தாலும் முதன்முறையாக ஒரு முதலாளி என்று பொறுப்புடன் அமரும் முதல் மீட்டிங் அல்லவா அதனால் சிறிது உற்சாகத்துடனே கலந்து கொண்டேன்.மதிய உணவு இடைவேளையில் தான் அவனை பார்க்க முடிந்தது மிக உற்சாகமாக அவனும் இருந்ததாகவே எனக்கு தோன்றியது அவன் அருகில் சென்று ஹொவ் இஸ் தி மீட்டிங் என்று கேட்க அவன் கொயிட் இன்றஸ்டிங் சார் என்றான். குட் மதியத்திற்கு மேல் இன்னும் நன்றாக இருக்கும் என்றேன்.நாங்கள் இருவரும் சகஜமாகபேசுவதைக்கண்ட பிற யூனியன் லீடர்கள் எங்களை வித்தியாசமாக கண்டனர். மாலை மீட்டிங் முடிந்த சிறிது நேரத்தில் பார்ட்டி துவங்கியது.நான் காலேஜ் லைஃப்பில் ட்ரிங்க்ஸ் அடிக்க ஆரம்பித்தால் ஐந்து ரௌண்ட்ஸ் தான் அதை தாண்டினால் நான் ஓம்லெட் தான் ஆனால் இன்று இவனுடன் இருக்கப்போகிறோம் என்கிற மிதப்பில் கொஞ்சம் கூடுதல் உற்சாகத்துடனே ட்ரிங்க்ஸ் அடிக்க ஆரம்பிதேன். அவன் என்னருகில் வந்து சார் போகலாமா என்றான் இரு இரு இப்போ தான் மூணு ரவுண்டு முடிஞ்சிருக்கு என் லிமிட் ஐந்து என்றேன் சார் வேண்டாம் நாளைக்கு மீட்டிங் இருக்கு என்றேன்.ஐ நோ ஸ்வீட் ஹார்ட் என்றபடியே மடக் மடக் என்று சில ரௌண்ட்ஸ் முன்னேறினேன்.என்னை அவன் அங்கிருந்து வலுக்கட்டாயமாக என்னை சாப்பிட வைத்து ரூமிற்குள் இழுத்து சென்றான். எனக்கு வயிற்றை குமட்டுவது போல் தோன்றியது அவனுக்கு தெரியாமல் பாத்ரூமிற்குள் சென்றிட பகீரத முயற்சி செய்தேன் ஆனால் கதவின் அருகிலேயே பெரிய ஓம்லெட் அடித்தேன்.எனக்கு கூச்சமாக இருந்தது அதற்கு பின் அவன் பரபரப்பாக ஏதேதோ செய்தான் என்னை அவன் அறைக்குள் அழைத்து செல்வதைப்போல தோன்றியது இன்று இரவு அவனிடம் நிறைய பேசவேண்டும் என் மனதை கொட்டவேண்டும் என்றெல்லாம் எண்ணிய நான் அங்கிருந்த .பெட்டை பாரத்ததும் அப்படியே அதில் சரிந்தேன்.அப்படியே உறங்கியும் போனேன் ஆனால் உறக்க கிறக்கத்தில் அவனிடம் யு ஆர் சோ ஸ்வீட் டியர் ஐ லவ் யு என்று என் மனதில் உள்ளதை சொல்லியேவிட்டேன்.ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் எழுந்த பொழுது காலை மணி ஏழு ஆகிவிட்டது தலை கிண்ணென்று வலித்தது ச்சே இந்த ட்ரிங்க்ஸ் சாப்பிட்டாலே இப்படி தான் என்று வழக்கம் போல முனகி கொண்டே எழுந்த என்னை பார்த்து குட் மார்னிங் சார் என்ற படி என்னருகில் வந்தான் அவன். ஹே நீ என்ன செய்கிறாய் இங்கு என்றேன் ஏன் சொல்ல மாட்டேன்க ராத்திரி நீங்க பண்ண அலம்புக்கு இதுக்கு மேலயும் சொல்வீங்க என்றதும் தான் உணர்ந்தேன் நான் அவன் ரூமில் இருப்பதையும் ராத்திரி வாந்தி எடுத்ததையும் ச்சே என் மானமே போச்சே என்று தலையில் அடித்துக்கொண்டேன்.இப்படி தண்ணி அடிப்பானேன் மறுநாள் காலையில் வருந்துவானேன் என்று இலவச அட்வைஸ் செய்தான்.டேய் நான் எப்பவும் ஸ்டெடி தான் நேத்து தான் நீயிருந்த தைரியத்தில் கொஞ்சம் ஜாஸ்தி ஆகி விட்டது என்றேன்.நீங்கள் ஜாஸ்தி ரௌண்ட்சில் மட்டுமில்லை என்றபடியே என் கண்களை உற்றுப்பார்த்தான் அவன் கண்களின் வீரியத்தை பார்க்க முடியாமல் தலைகுனிந்தபடியே ஏன் ஏதாவது நான் உளறினேனா என்று கேட்டேன்.அது உளறலா இல்லை உண்மையா என்று தெரியவில்லை என்று அவன் கூறினான்.ஏதோ சொல்லி வசமாக மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் புரிந்தது.இரு நான் குளித்து விட்டு வருகிறேன் என்ற படியே என் ரூமை நோக்கி விரைந்தேன் அப்பொழுது தான் உரைத்தது நான் நைட் ட்ரஸில் இருப்பதை நான் டிரஸ் மாறிய ஜாபகம் இல்லை கண்டிப்பாக அவன் தான் எனக்கு டிரஸ் மாற்றியிருக்க வேண்டும் அந்த நினைவே என்னை சிலிர்க்க செய்தது,என்னவன் என் உடலை ஸ்பரிசித்தான் என்பதே எனக்கு எல்லையில்லா ஆனந்தத்தை தந்தது.நான் சிறிது நினைவில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக் இருந்திருக்கும் எல்லாம் இந்த ட்ரிங்க்ஸ் செய்த வேலை என்று சபித்துக்கொண்டேன் ஆனால் அந்த ட்ரிங்க்ஸ் தான் இத்தனை பேருதவியும் செய்தது என்பதும் உண்மை தானே என்றும் உரைத்தது.குளித்து முடித்து அவனை இண்டர்காமில் அழைத்தேன் கதவை தட்டியபடியே வந்தான்..என்னவன் இன்று செம க்யூட்டாக இருந்தான் அப்படியே ஜொல் லிட்டர் கணக்கில் வழிந்தது இமைத்த கண் மூடாமல் அவனையே பார்த்தபடியிருந்த என்னை, சார் என்று உலுக்கினான். மீண்டும் அவன் ஸ்பரிசம் இப்பொழுது என் சுயநினைவிலேயே....
 
இன்று:

நான் இப்படி பலவாறு யோசித்துக்கொண்டே ஐ.சி.யு வையும் ஒரு கண் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.நான் அங்கு பார்த்துக்கொண்டிருக்கையிலே திடீர் பரபரப்பை கண்டேன்,நர்ஸ் டாக்டரை நோக்கி ஓடுவதும் அனைவருமாக மீண்டும் ஐ.சி.யு க்குள் நுழைவதையும் கண்டேன். என் மனம் வேகமாக அடிக்கத்துவங்கியது.என் மனதில் தோன்றிய அனைத்து தெய்வங்களையும் வேண்டத்துவங்கினேன்.எனக்கென்னவோ மனதில் ஒருவித பயம் தொற்றிகொண்டது.மனம் மட்டுமல்லாமல் வாயும் சேர்ந்து அவர்க்கு ஒன்றும் இருக்காது என்று புலம்ப தொடங்கியது
 
அன்று:

அவர் போதையில் உளறினாரா இல்லை ஆழ்மனத்தின் வெளிப்பாடா என்று எனக்கு யூகிக்க முடியவில்லை.அந்த அதிர்ச்சியிலிருந்து மீள எனக்கு சிறிது நேரம் பிடித்தது.இவர் என்ன சொன்னார்?என்னிடமா சொன்னார்?அவரின் வார்த்தையில் ஒரு உண்மை தெரிந்ததே எனக்கு தலையே வெடிக்கும் போல இருந்தது.அமைதியாக தூங்கும் அவரைப்பார்த்தேன் மிகவும் களைப்பாக தூங்கினார் ஆனாலும் ஏதோ ஒரு அமைதி தெரிந்தது அவரின் சாந்தமான முகத்தில்.இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.ஆனாலும் ஒரு நிமிடம் மனம் குதூகலிக்கவே செய்தது.அப்படியே ஆழ்ந்த சிந்தனையில் தூங்கியும் போனேன்.எப்பொழுதும் போல் அதிகாலையிலேயே எழுந்த நான் அவர் இன்னும் தூங்குவதை கண்டு ஒரு நிமிடம் ரசித்துப்பார்தேன் ஆனாலும் மனம் என்னவோ செய்தது.சில மணித்துளிகள் கழிந்து அவர் எழுந்தார். குட் மார்னிங் சார் என்ற படி அவரருகில் சென்றேன். ஹே நீ என்ன செய்கிறாய் இங்கு என்றவரிடம் ஏன் சொல்ல மாட்டேன்க ராத்திரி நீங்க பண்ண அலம்புக்கு இதுக்கு மேலயும் சொல்வீங்க என்றேன் நான். அவர் தலையில் அடித்துக்கொண்டார்.இப்படி தண்ணி அடிப்பானேன் மறுநாள் காலையில் வருந்துவானேன் என்று பிரசங்கம் செய்தேன்.டேய் நான் எப்பவும் ஸ்டெடி தான் நேத்து தான் நீயிருந்த தைரியத்தில் கொஞ்சம் ஜாஸ்தி ஆகி விட்டது என்றார்.நீங்கள் ஜாஸ்தி ரௌண்ட்சில் மட்டுமில்லை என்றபடியே அவர் கண்களை உற்றுப்பார்த்தேன் அவர் தலைகுனிந்தபடியே ஏன் ஏதாவது நான் உளறினேனா என்று கேட்கவும்.அது உளறலா இல்லை உண்மையா என்று தெரியவில்லை என்று நான் கூறினேன்.ஏதோ நினைத்தவராக .இரு நான் குளித்து விட்டு வருகிறேன் என்ற படியே அவர் ரூமை நோக்கி விரைந்தார்.சிறிது நேரம் கழித்து அவர் என்னை இண்டர்காமில் அழைத்தார்,கதவை தட்டிக்கொண்டு அவரின் அறைக்குள் நுழைந்தேன்.மிக அருமையான உடையில் இருந்தார்.உடைகள் மட்டும் பல ஆயிரங்களை தாண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.என்னையே உற்றுப்பார்த்த அவரிடம் சார் என்று உலுக்கினேன் சுதாரித்த அவர் என்னைபார்த்து நான் என்ன சொன்னேன் நேற்று என்று என்னிடம் கேட்டார்..எனக்கு என்ன சொல்வது எப்படி சொல்வது என்று புரியவில்லை.இருந்தாலும் துணிவை வரவைத்து அவர் நேற்றிரவு என்னிடம் சொன்னதை அப்படியே சொன்னேன்.அதற்கு அவர் அப்பாடா நான் எங்கே சொல்லவில்லையோ என்று நினைத்தேன் என்று மிக கூலாக சொன்னதும் நான் அவரை ஆச்சர்யமாக பார்த்தேன். நிஜமாக தான் இதை எப்படி உன்னிடம் சொல்வது என்று தான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன் நல்லவேளை சொல்லிவிட்டேன் என்றார் அமைதியாக.எனக்கு தெரியும் உனக்கும் என்னை பிடித்திருக்கிறது என்று அதை தைரியமாக ஒப்புக்கொள் என்றார்.நான் ஒன்றும் பேசாமல் சார் நாம அப்புறமா பேசலாம் மீட்டிங்கிற்கு நேரமாகி விட்டது என்று கூறி அறையை விட்டு வெளியேறினேன்.
 
இன்று:

சில நிமிடங்களில் மீண்டும் பரபரப்பும் சத்தங்களும், என்னை சுற்றி டாக்டர்கள். என்னை பெயர் சொல்லி அழைக்கிறார்கள் நான் கண்ணை திறக்க முயல்கிறேன் ஏனோ இருட்டாகத்தான் தெரிகிறது.ஆனாலும் இப்பொழுது கொஞ்சம் தெளிவாக கேட்கிறது அவர்களின் அழைப்பும் அவர்களின் அசைவையும் உணர்கிறேன் என் கையை மீண்டும் அசைக்கிறேன் அங்கிருந்து குட் கண்ணை திறந்து பாருங்கள் என்று மீண்டும் என் பெயரை கூவி அழைக்கிறார்கள். நான் மிகவும் கடினப்பட்டு கண் திறக்கிறேன்.........
 
அன்று:

அவனின் ஸ்பரிசம் தந்த தைரியமும் அவனின் அருகாமையும் கொஞ்சம் மிதப்பை தந்தது.அவனைபார்த்து நான் நேற்று உன்னிடம் என்ன சொன்னேன் என்று கேட்டேன் அவன் மிகவும் சங்கடமாகி பின் நீங்கள் என்னைப்பார்த்து யு ஆர் சோ ஸ்வீட் டியர் ஐ லவ் யு என்று சொன்னீர்கள் என்றான். அப்பாடா நான் எங்கே சொல்லவில்லையோ என்று நினைத்தேன் என்று மிக கூலாக அவனிடம் நான் சொன்னதும் அவன் என்னை ஆச்சர்யமாக பார்த்தான். நிஜமாக தான் இதை எப்படி உன்னிடம் சொல்வது என்று தான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன் நல்லவேளை சொல்லிவிட்டேன் என்றேன் மீண்டும் .எனக்கு தெரியும் உனக்கும் என்னை பிடித்திருக்கிறது என்று அதை தைரியமாக ஒப்புக்கொள் என்றேன் .அவன் ஒன்றும் பேசாமல் சார் நாம அப்புறமா பேசலாம் மீட்டிங்கிற்கு நேரமாகி விட்டது என்று கூறி அறையை விட்டு வெளியேறினான்.ஒரு நிம்டம் என்று அவன் கையை பிடித்து இழுத்து அவனின் இதழ்களில் ஒரு முத்தம் கொடுத்தேன்.அவனின் அதிர்ச்சி அப்பட்டமாக அவனின் முகத்தில் தெரிந்தது.அவன் திமிரவில்லை மறுக்கவில்லை ஆனால் மெதுவாக என்னைப்பிடித்து தள்ளினான் டோன்ட் யு ஹவ் பேசிக் மேனர்ஸ் என்று பொங்கியவனின் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டது நான் மிரண்டுப்போனேன்.ஏண்டா உனக்கு என்னை பிடிக்கவில்லையா என்றேன் பிடித்திருந்தால் முத்தம் கொடுப்பீர்களோ என்றான். அவனின் கண்களில் ஒரு வெறுப்பை கண்டேன்.என்னைப்பார்க்க பிடிக்காமல் வெளியேறினான். நான் அவசரப்பட்டுவிட்டேனோ என்று கலங்கினேன்.அவனின் முகம் பார்க்கவே எனக்கு கூசியது,ஒரு நிமிட சலனத்தில் அசிங்கப்படுதிக்கொண்டேனோ என்னையே என்று எண்ணினேன்.அன்றைய செச்சென்ஸ் ஒன்றுமே மண்டையில் ஏறவில்லை. மாலை மீட்டிங் முடிந்து ஊர் திரும்பும் நேரம் வந்தது.அவன் அறைக்குள் சென்றவன் சில நிமிடங்களிலே வந்தவன் நான் கீழே ரிசெப்ஷனில் வெயிட் செய்கிறேன் என்று சொல்லி விட்டு வெளியேறினான்.நான் பிரமை பிடித்தது போல ரூமில் தவித்தேன்.
 
இன்று:

வாய் மட்டும் புலம்பினாலும் மனம் எதிர் வினையாகவே யோசித்துக்கொண்டிருந்தது.உள்ளே சென்ற டாக்டர்களின் வருகைக்காக என்னை போல அவரின் பெற்றோரும் காத்துக்கொண்டிருந்தனர். உலகிலேயே மிக கொடுமையானது ஐ.சி.யூவின் வாசலில் உள்ளிருப்பவரின் நிலை என்னவென்று தெரியாமலே காத்துக்கொண்டிருப்பது தான் போல.நானும் அந்த கொடுமையை அனுபவித்துக்கொண்டிருந்தேன்.சில மணித்துளிகள் கடந்த பின் ஒரே ஒரு டாக்டர் மட்டும் வெளியில் வந்தார் வந்தவர் இதில் யார் என்று என் பெயரைக்கூறி கொண்டு வந்தார் அவரின் அன்னை என்னை சுட்டிகாண்பிக்க நான் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி நின்றேன் நீங்கள் மட்டும் உள்ளே வாருங்கள் என்று என்னை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
 
அன்று:

சார் நாம அப்புறமா பேசலாம் மீட்டிங்கிற்கு நேரமாகி விட்டது என்று கூறி அறையை விட்டு வெளியேறிய என்னை ஒரு நிமிடம் என்றார். என்ன என்று திரும்புவதற்குள் இச் சென்று என் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தார்.ஒரு நிமிடம் நிலை தடுமாறினேன்.என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்க்குள் அது நடந்து விட்டது.நான் எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியவில்லை ஏன் இவர் இப்படி நடந்து கொண்டார் என்று வெறுப்பே மிஞ்சியது.என் கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப்பார்த்தது,உதடுகள் துடித்தது வாரத்தை வெளி வர மறுத்தது மிகவும் கடினமாக தொண்டை அடைக்க அவரை நோக்கி டோன்ட் யு ஹவ் பேசிக் மேனர்ஸ் என்று கூறி அவரை பிடித்து தள்ளினேன்.அவரின் முகபாவங்களை பார்க்கவில்லை ஏன் அவரின் முகத்தை பார்க்கவே எனக்கு எரிச்சலானது. என்னை பார்த்து ஏண்டா உனக்கு என்னை பிடிக்கவில்லையா என்றார்.எனக்கு கோபம் தலைக்கேறியது பிடித்திருந்தால் முத்தம் கொடுப்பீர்களோ என்றேன். மேற்கொண்டு அங்கு நிற்க பிடிக்காமல் சர சர என மீட்டிங் ஹால் சென்றேன்.அங்கு நடந்த எதுவும் என்னுள் புகவில்லை.திரும்ப திரும்ப அவர் நடந்து கொண்ட விதம் என்னை கடுப்பாகியது அவரின் மீது நான் வைத்திருந்த மரியாதை எல்லாம் ஒரு நொடியில் காலி செய்து விட்டார்.இதெற்கெல்லாம் நானும் ஒரு விதத்தில் காரணமோ என்றும் யோசித்தேன்.எனக்கு அவரை பிடித்திருந்தது அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை ஆனால் அது இத்தகைய விருப்பம் தானா என்று என்னால் அறுதியிட்டு கூற முடியவில்லை.கே என்பது தவறா இல்லை அசிங்கமா என்றெல்லாம் நான் எண்ணவில்லை ஆனால் என் மனம் அப்படிப்பட்ட ஒரு உறவுக்கு தயாரானதா என்றும் புரியவில்லை. என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் கிண்டல் செய்வது உண்டு ஏன் சில நண்பர்களைப்பார்த்து டேய் அவங்க ரெண்டு பெரும் புருஷன் பொஞ்சாதி என்று கேலி செய்வதும் உண்டு ஆனால் நான் அத்தகைய ஒரு உறவிற்கு தயார் தானா என்றும் தெரியவில்லை.அப்படியே இருந்தாலும் இது இரு உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா?இதை பேசி அல்லவா முடிவு செய்ய வேண்டும். ஒருவரின் விருப்பம் அறியாமல் எப்படி அவர் எல்லை மீறலாம் நினைக்க நினைக்க எனக்கு அருவருப்பே அதிகரித்தது.அந்த நொடியை நினைத்து பார்க்கவே மனம் கூசியது.எப்பொழுதுடா ஊருக்கு திரும்பலாம் என்று தோன்றியது.மீண்டும் அவருடன் பயணம் என்பதே எனக்கு எரிச்சலை தந்தது. என் அறைக்குள் சென்ற சில நிமிடங்களிலே வெளியேறி அவரை பார்க்காமலே நான் கீழே ரிசெப்ஷனில் வெயிட் செய்கிறேன் என்று சொல்லி விட்டு வெளியேறினேன்.சில நிமிடங்கள் கழிந்து அவர் கீழே வந்தார் ஏர்போர்ட் வரை இருவரும் ஒரு வார்த்தை பேச வில்லை.ப்ளேனில் வைத்து சில உதவிகள் செய்ய முன்வந்தாலும் நான் அவர் பக்கம் திரும்பவோ ஏன் அவர் பக்கமே திரும்பவில்லை. ஊர் வந்து சேரும் வரை இருவரும் உம்மென்றே இருந்தோம். அவரின் கார் வந்திருந்தது என்னை அழைத்து செல்ல கம்பனியின் காரும் வந்திருந்தது வரேன் சார் என்று தலை குனிந்து சொல்லவும் ஐ ஆம் சாரி என்று அவர் சொன்னது என் காதில் விழுந்தது சட்டை செய்யாமல் காரை நோக்கி நடந்தேன். 
 
இன்று:

கண்ணை திறக்க மிகவும் கடினமாக இருந்தாலும் முயற்சி செய்தேன் மெதுவாக விளக்கின் வெளிச்சம் என் கண்ணில் ஊடுருவியது திறந்த கண்கள் மூட முயன்றது.கண் இமைகள் படபடத்தது மீண்டும் கண் திறந்த போது என்னை சுற்றிலும் டாக்டர்கள்,நான் மெதுவாக கண்களை சுழல விட்டேன் எனக்கு பரிச்சயமான ஒரு முகமும் தென்படவில்லை.என் வாயிலிருந்து அவனின் பெயர் மட்டுமே வெளி வந்தது.இரண்டொருமுறை அவன் பெயரையே மீண்டும் உச்சரித்தேன்.யாரோ கதவை திறந்து வெளியில் போனார்கள். ஒரு வேலை அவனை அழைத்து வரப்போனார்களோ? என்னுள் இப்பொழுது புது உற்சாகம் தோன்றியது ரத்தம் சூடாவதை உணர்ந்தேன்.அவனை மீண்டும் பார்க்கபோகிறேனோ என்று மனம் குதூகலித்தது.மீண்டும் மீண்டும் என் உதடுகள் அவனின் பெயரை.........
 
அன்று: 

பிரமை பிடித்து அமர்ந்திருந்த எனக்கு ஒன்றும் ஓடவில்லை.நான் என்ன தவறு செய்தேன்.அவனை விரும்பியது தவறா?இல்லை வெளிப்படுத்திய முறை தவறா? ஒன்றும் புரியவில்லை. அவனுக்கும் என்னை பிடித்திருந்தது போல தானே நடந்து கொண்டான்.
நான் கை கூப்பி வணக்கம் செலுத்தியபோது வலுக்கட்டாயமாக என் கைகளை குலுக்கினானே? 
உன் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்றதற்கு மனதில் நினைப்பதைஎல்லாம் சொல்லிவிட முடியுமா என்றானல்லவா?
இன்னொரு தருணத்தில் ஆர் யூ மேகிங் ஃபன் ஆன் மீ என்றதற்கு . டெஃபினட்லி நாட் நொவ் என்று இரு பொருள் பட பேசினானே?
ஏன் இங்கு வைத்து கூட அவன் காதை பிடித்து திருகிய போது சார் விடுங்க சார் என் டிரஸ்லாம் கசங்கிட போகுது என்றதும்.அதுக்கு ஒரு வழி இருக்கு என்று நான் சொல்ல ஆள விடுங்க சார் நாம மீட்டிங் போவோம் என்றானே?
இதெற்கெல்லாம் என்ன அர்த்தம் என்னை பிடிக்காமலா இப்படி பேசினான்.இல்லை நான் தான் தவறாக புரிந்து கொண்டேனா? எனக்கு தலை கிர்ர்ரெண்றிருந்தது.
சரி ப்ளேனில் வைத்து பெசிகொள்ளலாமென்று ஏர்போர்ட் வரை இருவரும் பேசாமலே வந்தோம். ஆனால் அதற்கு பின்பும் அவன் என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை.நான் எப்பொழுதும் போல் உதவி செய்ய முனைந்தபோது என் உதவியை அவன் மறுதலித்தான்.எனக்கு இன்னமும் புரியாதது அவனின் இந்த திடீர் மனமாற்றம் தான். எனக்கு நன்றாக தெரியும் அவனுக்கு என்னை பிடித்திருக்கிறது என்று ஆனால் அதை ஒத்துக்கொள்ள கூடிய தைரியம் அவனுக்கு வரவில்லை.மும்பை வரும் போது அவனிடம் நான் கண்ட உற்சாகம்,துள்ளல்,பிரமிப்பு அனைத்தும் இப்பொழுது மிஸ்ஸிங்,ஏனோ என் அருகில் இருப்பதே ஒரு வெறுப்பை போல இருந்தான்.அவனின் உடல் அசைவுகளின் மூலம் நான் இதை நன்றாகவே உணர முடிந்தது.எனக்கு துக்கம் தொண்டை வரை அடைத்தது.கண்ணீரும் இப்போவா அப்போவா என்பது போல போக்கு காட்டியது.அவன் முன் என்னுடைய உறுதியை குலைக்கும் எந்த செயலும் செய்ய கூடாது என மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். இப்படி ஒரு முடிவிற்காக தான் நான் இத்தனை பிரயாசை பட்டேனா என்றும் சலித்துக்கொண்டேன்.ஒரு வழியாக ஏர்போர்ட் வந்து சேர்ந்திருந்தோம். என்னை அழைத்து செல்ல கார் வந்திருந்தது கம்பனியின் காரும் வந்திருந்தது அவனை அழைத்து செல்ல. மெதுவாக வரேன் சார் என்று அவன் தலை குனிந்து கொண்டே சொல்லவும் நான் பட்டென்று ஐ ஆம் சாரி என்று சொன்னேன்,ஆனால் அவன் அதை கேட்டது போலவே பாவிக்காமல் காரை நோக்கி நடந்தான்.எனக்கு அவமானமாக போய் விட்டது,இவன் பக்கமே இனி திரும்ப கூடாது என்றெண்ணி வீட்டிற்கு போனேன்,ஆனால் அடுத்த நொடி முதல் மறு நாள் காலை ஆபீஸ் செல்லும் வரை அவன் மட்டுமே அவன் நினைவுகள் மட்டுமே முழுவதும்.ஆபீசில் அவனை அன்று காண முடியவில்லை இரவு அவனிடம் பேசியாக வேண்டும் என்று முடிவெடுத்தேன். 
 
இன்று:

அவர் நினைவு வந்ததும் என் பெயரை தான் உச்சரித்தாரா? அவரின் அப்பா அம்மாவை விட நான் எந்த விதத்தில் உசத்தி? ஏன் இப்படி செய்தார்?அவர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் நான் ஒரு சாதாரண லேபர்.அவரை நான் அதிகம் காயப்படுத்தியே இருந்திருக்கிறேன் ஏன் கடைசியாக என்னை பார்க்க வந்த பொழுதும் நான் சொன்ன வார்த்தை தானே இந்தளவுக்கு அவரை கொண்டு சென்று விட்டது.இருந்தும் ஏன் என்னை காண விருப்பம் தெரிவித்தார்,நான் என்ன தந்து விட்டேன் இவ்வாறு பல எண்ணம் ஓடி கொண்டிருந்தாலும் அவரை பார்க்க போகிறோம் என்ற ஆவலும் அடங்க வில்லை என்னை மாஸ்க் மற்றும் க்ளோவ்ஸ் அணிவித்து உள்ளே அழைத்து சென்றார்கள் அவர் படுக்கையில் உயிர்காக்கும் கருவிகளுக்குள் புதைந்து இருந்தார். அவரை கண்டதும் என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அவரின் அருகில் சென்ற என்னை அவர் கண்டு கொண்டார் அவரின் கண்கள் பிரகாசமானது என்னை கண்ணசைத்து அழைத்தார் மெதுவாக அவரின் அருகில் சென்றேன் மீண்டும் கண்ணசைத்தார் அவரின் முகம் நோக்கி குனிந்தேன் என்னிடம் அவர்.............. 
 
அன்று: 

கம்பனியின் காரில் வீடு வந்த நான் அன்று முழுவதும் கடும் கோபத்திலே தான் இருந்தேன்.மறுநாள் அவரின் திசை இருந்த பக்கத்திலேயே செல்லவில்லை. அவர் வந்தாரா போனாரா என்று கூட தெரியவில்லை.பலர் என்னிடம் வந்து மீட்டிங் பற்றியும் ப்ளேன் அனுபவம் பற்றியும் விசாரித்தார்கள் ஏதேதோ சொல்லி அனுப்பி வைத்தேன் அதை நினைத்து பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருந்தது. வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நான் மற்ற வேலைகளில் மூழ்கி விட்டேன் அப்பொழுது எனது மொபைல் சிணுங்கவே எடுத்து பார்த்தால் இவரின் அழைப்பு எடுக்கவா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் கால் கட் ஆகி விட்டது.ஏன் இப்பொழுது அழைக்கிறார் மீண்டும் அழைத்தால் என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் மீண்டும் அவரின் நம்பர் திரையில்.தயங்கி தயங்கி எடுத்து ஹலோ என்றதும் மறுமுனையில் நீ எங்கே இருக்கே என்றார் அதிகார தொனியில் ஏன் வீட்டில் தான் என்றேன் நானும் அதே தொனியுடன். உன் வீடு எங்கேயிருக்கு என்று கேட்கவும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று நான் திருப்பி கேட்டேன். எனக்கு உன்னுடன் பேச வேண்டும் என்றார் அலுவல் விஷயம் என்றால் நாளை காலை பேசிக்கொள்ளலாம் வேறு விஷயங்கள் பேச வேண்டிய அவசியம் எனக்கு உங்களிடம் இல்லை என்று சொல்லி கால் கட் செய்தேன்.அப்படி செய்திருக்க கூடாதோ என்று எண்ணிய படியே நான் அவரை வசை பாடி கொண்டிருந்தேன். ஒரு மணி நேரம் ஆகியிருக்கும் என் வீட்டு வாசலில் அவரின் கார் காரிலிருந்த படியே என்னை ஹார்ன் அடித்தார் இவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் இதற்கு இன்று ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவரின் காரை நோக்கி போனேன். கார் கதவை திறந்து ஏறு என்றார் ஒன்றும் பேசாமல் நான் ஏறி அமர்ந்தேன்.,கார் அருகிலிருந்த பார்க்கை நோக்கி சென்றது.காரை லாக் செய்து விட்டு உள்ளே சென்றோம் ஆள் அதிகமில்லாத ஒரு இருக்கையில் அமர்ந்தோம். பேசாமலிருந்த அவரை நோக்கி சொல்லுங்க என்ன விஷயம் என்றேன்.ஏன் இப்படி செய்தாய் என்றார்? எனக்கு அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்தது ஹலோ செய்ததெல்லாம் நீங்கள் இப்பொழுது என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்க உங்களுக்கு வெட்கமாயில்லை என்றேன்.அதிர்ந்த அவர் நான் செய்த முறை வேண்டுமானால் தவறிருக்கலாம் ஆனால் நீயும் தான் அதற்கு காரணம் என்றார். சீ இப்படி சொல்ல உங்களுக்கு அசிங்கமாயில்லை என்றேன் இதில் வெட்கப்பட என்னயிருக்கிறது எனக்கு உன்னை பிடித்திருக்கிறது டாம் இட் ஐ லவ் யு வாட்ஸ் ராங் இன் இட் என்று மீண்டும் பழைய பல்லவியை பாடினார். இப்பொழுது எனக்கு இவரின் அறியாமையை நினைத்து இரக்கம் தோன்றியது இருந்தாலும் இதை இப்படியே விடக்கூடாது என்றெண்ணிய நான் அவரை பார்த்து கேட்டேன்........ 
 
 
- தொடரும்
 
தனியாக தவிக்கின்றேன் - Part 3 - Tamil Gay Sex Story (http://otgblg.blogspot.com)
இல் இதன் மிகுதியை வாசிக்கவும்.

2 comments:

  1. It is easy to take off clothes & have sex. But to open your Soul to someone, letting them know your thoughts, dreams, fears, hopes, spirit....That's being Real Naked.
    Looking fwd to get real naked with someone.... interested girls from tamilnadu can contact me at my whatsapp number :+917639578730

    ReplyDelete
  2. Any unmarried girl in Chennai interested in sex can reach me at suresh40hot at gmail for safe sex.

    ReplyDelete