Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

ஓரிணமே ! - உங்கள் குழப்பத்தை விடுங்கள்

முன்னுரை:
தனது ஓரிண விருப்பத்தால் பலபேர் தனது பாலிணத்தை பற்றிய பெறும் குழப்பத்திற்க்கு ஆளாகின்றனர்.அவர்களின் அந்த குழப்பத்தை தீர்த்து அவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்க்காக இந்த படைப்பை வெளியிடுகிறேன்.
இது மாறுபட்ட பாலிணங்கள் பற்றிய விளக்கக் குறிப்புகள் கொண்டது. இப்படிப்பட்ட எல்லா வகையினரையும் நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்பதற்க்காக இங்கு விளக்கி இருக்கிறேன்.இவர்கள் எண்ணிக்கையில் மிக குறைவானவர்களாக இருக்கிறார்கள். நம்மில் பெரும்பாலானோர் இந்த பிரிவை சார்ந்தவர்கள் இல்லை. எனவே இவைகளைக் கண்டு நீங்கள் அஞ்சவேண்டாம். நம் பெரும்பாலானோரின் பிரிவு எது என்பதையும் இங்கு விளக்கி இருக்கிறேன். இங்கு குறிப்பிட்டுள்ள ஏதாவது கருத்து உங்களுக்கு நம்ப முடியாததாக இருந்தால் பாலியல் துறையை சார்ந்த சரியான ஒருவரிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளவும்.

ஹார்மோன்கள் (Hormones):
நம் உடலின் நரம்புகளின் தூண்டுதலுக்கு ஏற்ப்ப மூளையின் ஒரு குறிப்பிட்ட செல்கள்(Hypothalamus)இணைந்து சுரக்கும் ஒரு மென்மையான திரவமே ஹார்மோன்கள் எனப்படும்.ஹார்மோன்கள் மூளையில் உற்ப்பத்தியாகி முதுகந்தண்டின் நரம்புகள் வழியாக நமது உடலின் தேவையான பகுதிக்கு வேண்டிய உணர்வுகளை ஏற்படுத்தவும், அந்த பகுதிகளில் பல வளர்சிதை மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் பலவிதமான ஹார்மோன்கள் சுரந்து முக்கிய பகுதிகளை சரியாக செயல்படுத்தவும் உடலின் பலவிதமான வளர்சிதை மாற்றங்கள் ஏற்ப்படவும் முக்கியபங்கு வகிக்கிறது.

பாலியல் ஹார்மோன்கள் (Sexual Hormones):
மனித உடலில் ஏற்படும் பலவிதமான பாலியல் குறைப்பாடுகளுக்கு மிகமுக்கிய காரணமாக இருப்பது இந்த பாலியல் ஹார்மோன்கள் ஒழுங்கற்ற முறையில் உற்ப்பத்தியாவதுதான். மனித மூளையை பொறுத்தவரை ஆண்மூளை பெண்மூளை என தனித்தனி பேதம் கொண்டதாக இல்லை. அதன் அமைப்பும் செயல்பாடும் ஒரேவிதமாக இருக்கிறது. 


ஒரு ஆணிண் உடலில் ஆண் தன்மையை வெளிப்படுத்தவும், அவனது பாலியல் உறுப்புகளை சரியாக வளரச்செய்து தயார்படுத்தவும், அந்த பாலுருப்புகளை வேண்டிய நேரத்திற்க்கு எழுச்சியூட்டி செயல்பட செய்யவும் முக்கிய காரணமாக இருப்பது அவன் மூளையில் இருந்து உற்ப்பத்தியாகும் Testosterone (டெஸ்டோஸ்டெரான் ) என்ற ஹார்மோன்தான். ஒரு ஆணிண் சிறு வயதில் இருந்து அவனது பாலுறுப்புகளான ஆண்குறி, விதைப்பைகள், விந்து, விந்து திரவம் உற்ப்பத்தி செய்யும் சுரப்பி, விந்துப்பை,விந்து பீச்சியடிக்கும் குழாய் பேன்றவைகளின் வளர்ச்சிக்கும் அவைகளின் செயல்பட்டிற்க்கும் இந்த ஹார்மோன் உற்ப்பத்தியே மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் ஆணிண் அந்த அந்த குறிப்பிட்ட பருவ காலங்களில் முகத்தில் மீசை, தாடி, மார்பில் முடி, உடல் முழுவதும் முடி வளரவும், குரளை ஆண் குரளாக மாற்றவும், பெண் உடலைக்காட்டிலும் ஆண் உடலை பிரம்மாண்ட அளவாக வளர்ச்சியடைய செய்யவும் முக்கிய பங்கு வகிப்பது Testosteroneஎன்ற ஹார்மோன்தான். ஒரு ஆண் அவனின் உடல் அளவில் முழு ஆண்தன்மை வளர்ச்சியடைய அவனுக்கு முதல் இருபது ஆண்டுகள் ஆகின்றது.

அதேபோல் ஒரு பெண்ணுக்கு முகத்திலும் உடலிலும் முடி வளராமல் இருக்கவும், மார்பகங்கள் வளரவும்,பெண்குறி, மொட்டு, கருப்பை, அண்டகோசம், கரு உற்ப்பத்தி, மாதவிடாய் போக்கு போன்றவைகளின் வளர்ச்சிக்கும் அந்த அந்த காலங்களில் அவைகளின் வேண்டிய செயல்பாட்டிற்க்கும் முக்கிய பங்கு வகிப்பது Oestrogen (ஓஸ்ட்ரோஜன் ) என்ற ஹார்மோன்தான். பெண் குரளை பாதுகாக்கவும், கருவுற்றபின் கருவை பாதுகாத்து வளரச்செய்யவும், உறிய காலத்தில் குழந்தையை பிரசவிக்க செய்வதிலும் இந்த ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த இரண்டு ஹார்மோன்களும் நமது உடலில் சரியான அளவிலும் சீராகவும் சுரக்காதபோது மனித உடலில் ஏற்ப்படும் பாலியல் குறைப்பாடுகளை படிப்படியாக பார்ப்போம்.

பாலியல் ஹார்மோன்களால் ஏற்படும் பாலியல் குறைப்பாடுகள் :

பாலியல் ஹார்மோன்கள் நாம் கருவாகி வளர ஆரம்பித்தது முதல் நாம் இறக்கும்வரை உள்ள காலம் முழுவதும் உற்ப்பத்தியாகி அதன் வேளையை நம் உடலில் செய்கிறது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டுவிதமான பாலிண ஹார்மோன்களும் உற்ப்பத்தியாகின்றன. ஒரு ஆணுக்கு Testosterone அதிகமாகவும் Oestrogenகுறைவாகவும் உற்ப்பத்தி ஆகின்றன. ஒரு பெண்ணுக்குOestrogenஅதிகமாகவும் Testosteroneகுறைவாகவும் உற்ப்பத்தி ஆகின்றன. அதனால்தான் ஒரு ஆண் வெறும் ஆண்தன்மை கொண்டவனாக மட்டும் இல்லாமல் பெண்தன்மை கொண்டவனாகவும் இருக்கிறான். அதேபோல் ஒரு பெண் வெறும் பெண்தன்மை கொண்டவளாக மட்டும் இல்லாமல் ஆண்தன்மை கொண்டவளாகவும் இருக்கிறாள்.

வகை-1    
ஒரு ஆணின் உடலில் Oestrogenஉற்ப்பத்தி அதிகமாகவும், Testosteroneஉற்ப்பத்தி குறைவாகவும் இருந்தால் அவனுக்கு உடல் மென்மை தன்மையோடு மயிர்கள் குறைந்தும், மார்பகம் பெருத்தும், ஆண்குறி சிறுத்தும், விதைப்பைகள் சிறுத்தும், விந்து திரவத்தில் விந்து அணுக்களின் உற்ப்பத்தி குறைந்தும் காணப்படும். அவன் அதிக கூச்ச சுபாவத்தோடு பெண்தன்மையோடு விளங்குவான். இவனிடம் பெண்மை உணர்வு மேலிடும். அதனால் அவன் ஒரு பெண்ணோடு பாலியல் உறவு கொள்வதை தவிர்ப்பான். அனால் பெண்களோடு நல்ல நட்பாக இருப்பான். அவனுக்கு ஆண்களே தனது பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடியவர்களாக இருப்பார்கள். எனவே அவன் ஆண்களோடே பாலியல் உறவு கொள்ள விரும்புவான்.

வகை-2
ஆண்களில் மற்றொரு வகையினர், இவர்கள் உடலால் முழு ஆண்தன்மை வளர்ச்சி பெற்றிருந்தும் அதிக கொழுப்பு சத்து உள்ள உணவை உண்பதால் உடலில் ஊளைச் சதை (Obesity)கொண்டவர்களாக இருந்தால் அல்லது அதிக மாசு அடைந்த நீர், காற்று உள்ள இடங்களில் தொடர்ந்து நீண்டகாலம் வாழ்ந்துக்கொண்டு இருப்பதாலும் இவர்களின் உடலில் Oestrogenஉற்ப்பத்தி அதிகமாகவும் Testosterone உற்ப்பத்தி குறைந்தும் காணப்படும். அதனால் இவர்களின் ஆண்குறியின் வளர்ச்சி குறையும். உடல் மென்மை அடையும்.இவர்கள் தன்னைவிட பெரிய ஆண்குறி உள்ள ஆண்களை விரும்புகின்றனர். அதனால் இவர்கள் ஆண்களோடு பாலியல் உறவுகொள்ள விரும்புகின்றனர். 


வகை-3
ஒருவரின் உடலில் ஆணுக்கான ஹார்மோனும் பெண்ணுக்கான ஹார்மோனும் சம அளவு உற்ப்பத்தி ஆகும்போது அவரின் உடலில் இரு தன்மைகளும் சம அளவு வெளிப்படுவதால் அவர்கள் தங்களின் பாலினம் பற்றிய பெரும் குழப்பத்திற்க்கு ஆளாகின்றனர். இவர்கள் ஆணாக இருந்தால் ஆண் உறுப்புகளும் அதற்க்கான செயல்பாடுகளும் சரியாக இல்லாமல், பெண்ணாக இருந்தால் பெண்ணுறுப்பும் அதன் செயல்பாடுகளும் சரியாக இல்லாமல் இருக்கும். இவர்கள் யாரோடும் பாலுறவு கொள்ள விரும்புவதில்லை. இவர்கள் வாழ்நாளை தனித்தே வாழ்ந்து கழிக்கின்றனர். 

வகை-4
ஒரு பெண்ணின் உடலில் Testosteroneஉற்ப்பத்தி அதிகமாகவும் Oestrogenஉற்ப்பத்தி குறைவாகவும் காணப்பட்டால் அவள் உடலில் ஆண்தன்மை மிகுந்து காணப்படும். ஆவளுக்கு மீசை, தாடி முளைக்கும்,உடலில் அதிக மயிர் முளைக்கும், உடல் முழுவதுமே பருத்து ஆண் தன்மையோடு காணப்படும்.பெண்ணுருப்பு, கர்ப்பப்பை, கரு உற்ப்பத்தி, மார்பகம் ஆகியவைகளின் வளர்ச்சி மற்றும் செயல்திறன் குறைந்து காணப்படும். இப்படிப்பட்ட பெண்கள் பெண்களோடே பாலுறவுக்கொள்ள விரும்புவார்கள்.பாலுவின்போது ஒரு ஆணைப்போல அந்த பெண்ணிடம் நடந்துக்கொள்வார்கள்.

உடல் அமைப்பினால் ஏற்ப்படும் குறைப்பாடுகள் :

பிரிவு 1:
கருவுற்றபின் குழந்தையின் பாகங்கள் ஒவ்வொன்றாக வளர ஆரம்பிக்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் குழந்தையின் பாலுறுப்புகள் உருவாகி வளர்வதற்க்கு முக்கிய காரணமான பாலியல் ஹார்மோன்கள் போதுமான அளவு உற்ப்பத்தி ஆகவில்லை எனில் குழந்தைக்கு சரியான பாலுறுப்புகள் உண்டாவதில் குழப்பம் ஏற்ப்படுகிறது. Testosteroneமற்றும் Oestrogenஹார்மோன்கள் சரிவிகிதத்தில் இல்லாமல் அளவுகள் மாறுபட்ட விகிதத்தில் மாறி மாறி உற்ப்பத்தி ஆகும்போது குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. இதன் காரணங்களால் குழந்தை ஆணாக இருந்தாலும் சரியான வரையறுக்கப்பட்ட பாலின உறுப்புகள் அமைவதில்லை. அவர்களுக்கு ஆணுருப்புகள் இருந்தாலும் அது செயலற்று மலட்டுத் தன்மை கொண்டதாக இருக்கும். இவர்கள் யாரோடும் பாலியல் உறவு கொள்ள முடியாமல் தனித்து வாழ்வர்.

பிரிவு 2:
ஒருசில குழந்தைக்கு ஆணுருப்பும் இருக்கும், பெண்ணுருப்பும் இருக்கும். ஆனால் இரண்டும் அரை குரை வளர்ச்சி அடைந்ததாக இருக்கும். இந்த குழந்தை ஆண் என்றும் சொல்ல முடியாது பெண் என்றும் சொல்ல முடியாது. இவர்கள் யாரோடும் பாலியல் உறவு கொள்ள முடியாமல் தனித்து வாழ்வர்.

பிரிவு 3:
ஒரு சிலருக்கு ஆண்குறி சிறுத்து சிரியதாக இருக்கும், அதாவது 2cmமுதல் 5cmவரை. விதைகள் விதைப்பையில் இல்லாமல் அடிவயிற்றின் உள்ளே தங்கி இருக்கும். இவர்களுக்கு பாலியல் ஆசை இருக்கும். மற்ற ஆண்களை போலவே பெண்ணோடு இவர்களின் செயல்களும் இருக்கும். இவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். இவர்கள் மற்ற ஆண்களைப்போல சீரான ஹார்மோன்கள் உற்ப்பத்தி கொண்டவர்கள். இவர்களிடம் இருக்கும் ஒரே குரை ஆண்குறி சிறுத்திருப்பது அவ்வளவுதான்.

பிரிவு 4:
ஒருசில பெண்களுக்கு அவர்களின் Clitorisஎன்ற பெண்குறியின் மொட்டு பகுதி அசாதாரணமாக நீண்டு வளர்ந்து தொங்கிக் கொண்டிருக்கும். அது பார்பதற்க்கு ஆண்குறி போலவும் அல்லது தொங்கிக்கொண்டிருக்கும் மனித நாக்கு போலவும் இருக்கும். அவளோடு பாலியலில் ஈடுபடும் ஆண் அதனால் அறுவருப்பு அடைவான். ஆனால் இவர்களும் மற்ற பெண்களைப் போலவே உடல் அளவில் சாதாரணமானவர்கள். இவர்களுக்கு பாலியல் குறைப்பாடு ஏதும் இருக்காது.

குறிப்பு:
உங்களில் யாருக்காவது ஆணுருப்பு 2cmஅல்லது அதற்க்கும் குறைவாக இருந்தால் பாலியல் மருத்துவரை அனுகி சரியான வழிமுறையை பெறவும். ஏனெனில் 2cmக்கு மேல் உள்ள எல்லா ஆண்குறிகளும் அளவில் சாதாரணமானவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மற்ற வகையினர் :

1. மனதால் :
இவர்கள் உடல் அளவில் ஒரு முழு ஆணாக அல்லது முழு பெண்ணாக இருப்பர். ஆனால் தனது மன உணர்வால் தூண்டப்பட்டு ஓரிண புணர்ச்சியை விரும்புவர். உடலால் பெண்ணாக இருந்தாலும் தனது மனதின் உந்துதலால் அவர்கள் பெண்களையே அதிகமாக விரும்புவர். பெண்களோடே பாலுறவுக்கெள்ள விரும்புவர். தனது மனநிலை இப்படி மாறுபட்டு இருப்பதற்க்கான காரணம் அவர்களுக்கே என்னவென்று தெரியாது.

அதேபோல் உடலால் ஆணாக இருந்தாலும் தனது மனதின் உந்துதலால் அவர்கள் ஆண்களையே அதிகமாக விரும்புவர். இவர்கள் ஆணோடு பாலுறவுக்கொள்ள விரும்புவர். இவர்களின் விருப்பம் ஏன் இப்படி இருக்கிறது என இவர்களுக்கே தெரியாது. இவன் திருமணம் செய்துக்கொள்ளலாம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். அதற்க்கு எந்த தடையும் இருக்காது. இவர்கள் பெரும்பாலும் Bisexer களாக இருப்பர்.இவர்களுக்கு எந்த பாலியல் குறைபாடும் கிடையாது.

2. பழக்கத்தால் :
நாம் பள்ளியில் படிக்கிறோம். அங்கு ஆண்கள்தான் நமக்கு நெருக்கமான நண்பர்கள் ஆவார்கள். நம் நண்பர்களை நாம் ரசிக்க ஆரம்பித்து விடுவோம். அவனுடைய நடை, பாவனை, பேச்சி, பழக்க வாழக்கம் என எல்லாவற்றையும் ரசிக்கிறோம். கழிவரையில்கூட நாம் ஆண் நண்பர்களோடு ஒன்றாக நின்று சிறுநீர்கழிக்கிறோம். அவனிடம் நமது அந்தரங்கம் எல்லாவற்றையும் தடையில்லாமல் பேசிக்கொள்கிறோம். பிறகு கல்லுரிக்கு சென்று படிக்கும் காலத்திலும் இதே நிகழ்வுகள்தான். இங்கே கொஞ்சம் கூச்சப்பட ஆரம்பிப்போம். பிறகு வேலைக்கு செல்கிறோம். அங்கும் ஆண்களோடுதான் நெருக்கமான பழக்கம்.
இந்த காரணங்களால் நாம் ஆணாக இருந்தாலும் மற்றொரு ஆணையே விரும்ப ஆரம்பித்து விடுகின்றோம். அதற்க்கு அடுத்து அவனோடு நாம் பாலுறவுகொள்ளவும் விரும்புகிறோம். அதுவும் எந்த தடையும் இல்லாமல் நிறைவேறிவிடுகிறது. எனவே அதற்க்கு பிறகு ஓரிண புணர்ச்சி என்பது நமக்கு பழக்கமாகிவிடுகிறது. ஆழ்ந்த இன்பத்தை அனுபவித்த பிறகு ஓரிண புணர்ச்சி நமது இயல்பான ஒரு செயலாகிவிடுகிறது. ஓரிண புணர்ச்சியில் நன்கு தேறிய ஒருவர் புதிதாக ஒருவரோடு புணர்ச்சிக்கொள்ளும்போது அவரும் ஓரிண புணர்ச்சியில் பழக்கம் உடையவராக ஆகிறார்.

இது பழக்கத்தாலும், அனுபவித்த சுகம் மீண்டும் வேண்டும் என்ற ஆர்வத்தாலும் வருகிறது. மனிதனிடம் இது ஓரு பாலியல் குறைபாடு இல்லை. இவர்கள் திருமணம் செய்திருந்தாலும் குழந்தைகள் இருந்தாலும் மீண்டும் ஆண்களோடு புணர்ச்சியை விரும்புவர். ஓரிண புணர்ச்சி தவறானது இல்லை என நன்றாக உணர்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் Bisexer கள் ஆவர்.

3. தூய ஓரிணச் சேர்க்கையாளர் :
ஓரு சிலர் தன் உடலால் முழு ஆணாக இருந்தும் ஆண்களையே மிகவும் விரும்புவர். இதற்க்கு காரணம் இவர்கள் தன் சிறு வயதில் இருந்தே ஆண்களை மட்டமே விரும்ப ஆரம்பித்து இருப்பர். ஆண்களோடே பாலுறவு கொள்வர். இவர்கள் பெண்களை திருமணம் செய்துக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் தனித்து வாழ்வர் அல்லது மற்றொரு ஆணை திருமணம் செய்துக்கொள்வர். இவர்களை Pure Gays என்று சொல்லலாம்.

4.பெண்கள்மீது ஏற்ப்பட்ட வெறுப்பால்:
சில ஆண்கள் தனக்கு பெண்களால் ஏற்ப்பட்ட பல கசப்பான அனுபவங்களின் காரணமாக பெண்களையே தனது வாழ்விலிருந்து நிரந்தரமாக விளக்கிவிட முடிவெடுக்கின்றனர். அவர்கள் எப்போதும் ஆண்களோடே பலுறவு கொள்கின்றனர். 

முடிவுரை :
பாலியல் குறைப்பாடு உள்ளவர்கள் ஓரிணச் சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. ஆனால் நமக்கு தீராத ஒரு பெரும் குழப்பம் எப்போதும் இருக்கிறது. ஓரிணச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பாலியல் குறைப்பாடு உள்ளவர்கள் என நாம் எண்ணுவதுதான் அது.
நமது சமூகம், ஓரிணச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அனைவரையும் பாலியல் குறைப்பாடு உள்ளவர்கள் என  கூறி இழிவுப் படுத்துகிறது. இதை ஒரு கருவியாக பயன்படுத்தி அவர்கள் ஓரிணச் சேர்க்கையை தடுக்கப் முயற்ச்சி செய்கின்றனர்  என்பதுதான் உண்மை. உங்களிடம் இருக்கும் இந்த குழப்பத்தை தெளிவாக்க எனது இந்த படைப்பு உதவும் என நம்புகிறேன்.

By  சரண்.




No comments:

Post a Comment