Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

தனியாக தவிக்கின்றேன் - Part 1 - Tamil Gay Sex Story

இன்று: 

நான் வேகமாக வண்டியை ஒட்டி கொண்டிருக்கிறேன். மணி பதினொன்றை தாண்டி விட்டது. எங்கு செல்கிறேன் எதை நோக்கி செல்கிறேன் ஒன்றும் தெரியவில்லை. என் மூளை எனக்கு கட்டளையிட மறுக்கிறது.மனம்போன போக்கில் செல்வது என்பது இது தானா?. கும்மிருட்டாக இருக்கிறது. முன் செல்லும் வாகனங்கள் என் வேகத்தை கண்டு ஒதுங்கி பயந்து செல்கிறது.
என்னுடைய ஸ்பீடா மீட்டர் 160ஐ தொடுகிறது இனியும் அழுத்துகிறேன் இருந்தும் வண்டியில் ஒரு குலுக்கல் இல்லை. புதிய இறக்குமதி வண்டியல்லவா.நான்கு வழி ஆறு வழி சாலைகளில் இந்த பாரிகார்ட் மற்றும் செப்பரேட்டர் பெரிய தொல்லை. என் எண்ணத்திற்கு குறுக்காக இவை இருக்கிறது. இதோ நான் எதிர்பார்த்த ஒரு சாலை இரண்டு தடங்களும் ஒன்று சேரும் இடம் இங்கு தான் நான் நினைத்ததை நிறைவேற்ற வேண்டும். இனியும் அழுத்துகிறேன் வண்டி என் கை மீறி செல்கிறது எதிரில் ஏதோ ஒரு வாகனம் லாரியாக இருக்க வேண்டும் அவன் இடது பக்கமாக ஓடிக்கிறான் நான் இனியும் அதை நோக்கி வேகமாக....
டமார்........ 
பெரும் சத்தத்துடன் என் வண்டி மோதுகிறது வண்டியிலிருந்து பலூன் விரிகிறது. சூடாக ஒரு திரவம் வழிகிறது என் ரத்தமாக தான் இருக்க வேண்டும். நான் மெதுவாக என் சுயநினைவை இழக்கிறேன்.
 
அன்று:

என் கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட சந்தோஷத்தில் என் தந்தை என்னை அவர் நிர்வகிக்கும் ஒரு சிறு தொழிற்சாலையின் பொறுப்பை ஏற்க சொல்லி என்னை பணித்திருந்தார்.பலமுறை தந்தையுடன் அங்கு சென்றிருந்தாலும் இன்று புதிதாக ஒரு மனிதனை போன்று உணர்கிறேன்.அவரின் சேம்பர்குள் அழைத்து சென்று என்னை அவரின் இருக்கையில் அமர வைத்தார். பலரின் கைதட்டல்களும் என் அன்னையின் காலை நேரத்து ஆசிர்வாதமும் என்னை பெருமிதத்துடன் இருக்கையில் அமர செய்தது. கான்பாரன்ஸ் ஹாலில் வைத்து ஒரு சிறிய அறிமுக கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது.ஒவ்வொருவருக்காக அறிமுகம் செய்யப்பட்டேன். அனைவரிடமும் புன்முறுவலுடன் கை குலுக்கிகொண்டே வந்தேன்.என் அந்தரங்க காரியதரிசியாக நியமிக்கப்பட்டிருந்த பெண் அன்றைய அலுவல்களையும் பார்க்க வேண்டிய நபர்களை பற்றியும் விவரித்தாள்.என்னிடம் விடை பெற்று சென்றார் என் தந்தை உன் மீது நம்பிக்கை இருக்கிறது என்ற ஒரு பார்வையில்.
சிறிது மூச்சு விட்டு ஒரு கோப்பை தேநீர் அருந்தி கொண்டிருந்த போது மேலாளர் ஓடி வந்தார். சார் அப்பா போய் விட்டாரா என்றார். ஆமாம் ஏன் என்றேன். சிறிய பிரச்சனை மீண்டும் யூனியனில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள் அப்பாவிடம் பேச வேண்டும் என்றார். எனக்கு சிறிதாக கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு பரவாயில்லை நான் ஹாண்டில் செய்கிறேன். பிரச்சனையின் சாராம்சத்தை கேட்டுக்கொண்ட நான் யூனியன் லீடரை வர சொன்னேன்.கதவை தள்ளிக்கொண்டு வந்த யூனியன் லீடரை கண்டதும் ஒரு நொடி திகைத்துபோனேன் ஒரு நடுத்தர வயது இல்லை வயதான ஒரு நபரை எதிர்பார்த்த எனக்கு என் வயதை ஒத்த ஒரு இளைஞன் வந்ததும் சிறிது ஜெர்க் ஆனேன். அவனின் திமிர்த்தனம் அப்பட்டமாக அவனின் முகத்தில் தெரிந்தது.ஆனால் என்ன ஒரு அழகு என்று ஒரு கணம் என் மனம் எண்ணவும் செய்தது.....
 
இன்று: 

இவரிடம் எப்படி இதை சொல்லி புரிய வைப்பது. இன்று நான் கொஞ்சம் கடுமையாக தான் நடந்து கொண்டேனோ?அந்த வார்த்தையை சொல்லியிருக்க வேண்டாமோ? அவரின் அழகுக்கும் படிப்பிற்கும் அந்தஸ்திற்கும் நான் எப்படி பொருத்தமாவேன்? முதலில் இதை இந்த சமூகம் ஏற்குமா? அவரின் வார்த்தைகள் கேட்க நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வருமா? அவர் என்னிடம் எதை கண்டு மயங்கினார்? எனக்கும் தான் அவரை பிடித்திருக்கிறது ஆனால் அது அவர் எண்ணும் படிதானா? எனக்கு புரியவில்லையே இருந்தாலும் அவரை இத்தனை கடிந்திருக்க கூடாதோ. என் வார்த்தைகளை கேட்டதும் அவர் மனம் வெகுவாக புண்பட்டதோ? ஏன் அந்த வார்த்தையை நான் பிரயோகித்தேன். எல்லாம் என்னுடைய திமிர்த்தனம் தானோ அவர் அடிக்கடி சொல்வதைப்போல?ஏன் அனைத்திற்கும் இத்தனை அவசரப்படுகிறார்? பொறுமை என்பதை அவரின் தந்தையிடமிருந்து சிறிதேனும் பெற்றிருக்கலாம்.அவர் கிளம்பி செல்லும் போது ஏன் அப்படி சொல்லி சென்றார்.ஏதேனும் விபரீதத்தில் கொண்டு முடியுமோ? மனம் வெகுவாக அடித்துக்கொண்டது. அவரின் கைபேசியை அழைத்துப்பார்த்தால் என்ன? தாங்கள் அழைத்த தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று மறுமொழி வந்தது. செல்லை அணைத்து விட்டாரா என்ன? ஒன்றும் புரியவில்லையே......? இதோ அவரின் கைபேசியில் இருந்து அழைப்பு வருகிறது யார் மறுமுனையில் பெரும் இரைச்சலுடன் சைரன் சத்தம் கேட்கிறது ..........
 
அன்று:

இந்த நிர்வாகம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது? ஒருவர் பணியில் உறங்கிகொண்டிருந்தால் அவரை கேள்விகேட்கலாம் ஆனால் எப்படி கையை நீட்டலாம்? என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த சூப்பர்வைசர் மன்னிப்பு கேட்கும் வரை வேலைக்கு செல்வதில்லை என்று தீர்மானித்து .நோட்டீஸ் கொடுத்தாகி விட்டது.பேசுவதற்கு அழைக்கிறார்கள் பெரியவரிடம் பேசினால் நியாயம் கிடைக்கும் இதோ என்னை அழைக்கிறார்கள் அறைக்குள் பெரியவர் இல்லை அவரின் இருக்கையில் யார் அது ஒ அவரின் மகன் வருவதாக பேசிக்கொண்டார்களே அவர் தானா இது. அழகாக தான் இருக்கிறார் ஆனால் என் வயது தானே என்ன பக்குவம் இருக்கும் என்று தோன்றியது. மறு நொடியே நாம் இந்த வயதில் இந்த யூனியன் லீடர் பதவிக்கு வரவில்லையா? அது போல அவருக்கும் திறமைஇருப்பதால் தானே அவரின் தந்தை இந்த உயரிய பொறுப்பை கொடுத்திருப்பார் என்று என் மனம் சொல்லிக்கொண்டது .அவரின் பார்வையில் என்ன ஒரு ஏளனம் தெரிகிறது இவருக்கு அத்தனை கிள்ளுகீரையாகி விட்டேனா நான். என் முகத்தில் உக்கிரம் கூடியது.அவர் என் கையை குலுக்கினார் என்ன ஒரு மிருதுவாக இருக்கிறது அவரின் கை. அது சரி நம்மை போல உழைக்கும் வர்க்கமாயிருந்தால் தானே? நம்மை சுரண்டி தின்பதால் தான் இத்தனை மெதுவாகயிருக்கிறது. ஏன் இத்தனை நேரம் கையை குலுக்குகிறார். கையை வலுக்கட்டாயமாக விடுவித்துக்கொண்டேன். என்னை இருக்கையில் அமர சொல்கிறார் என்ன ஒரு வசீகரமான புன்னகை இவருக்கு.என்னை ஏன் குறுகுறு என்று பார்க்கிறார். சொல்லுங்க வாட் இஸ் யுவர் ப்ரோப்ளம் என்று பீட்டர் விட்டார். நான் அவரிடம் யுவர் சூப்பர்வைசர் இஸ் தி ப்ரோப்ளம் என்று சொன்னேன். அவர் ஆச்சர்யமாக என்னை பார்த்ததாக தோன்றியது. நான் ஆங்கிலத்தில் நடந்ததை விளக்கினேன் அவரிடம் இருந்த ஏளனம் மறைந்து என்னை மரியாதையோடு பார்த்ததாக தோன்றியது.எனக்கு சிரிப்பு வந்தது ஆங்கிலத்திற்கு தான் இங்கு மரியாதை தாய் மொழியில் பேசினால் இளக்காரம் தான் போல என்று எண்ணிக்கொண்டேன்.....
 
இன்று: 

என்னை சுற்றி பல சத்தங்கள் சிலர் யாரையோ அடிப்பது போல் தோன்றியது.அவர் என்னிடம் தவறில்லை வண்டியை பாருங்கள் ராங் சைடில் யார் வந்தார் என்று பாருங்கள் என்று சொல்லவும் யாரோ அவர்க்கு சப்போர்ட் பண்ணினார்கள் ஆமாம் அவர் மிக வேகமாக தான் எங்களை முந்தி சென்றார். 108ஐ கூப்டாச்சா என்று கேட்கிறார்கள்.யாரோ என்னை இழுப்பதாக தோன்றியது வேண்டாம் என்னை தூக்காதீர்கள் என்று சொல்ல தோணியது ஆனால் நா எழும்பவில்லை என் மொபைலை யாரோ எடுக்கிறார்கள்.எனக்கு வெறும் சத்தம் தான் கேட்கிறது யாரையும் பார்க்க முடியவில்லை. சைரன் சத்தம் வெகு அருகாமையில் கேட்கிறது ஐயோ என்னை எங்கும் தூக்கி செல்லாதீர்கள் என்னை விடுங்கள் ஆனால் நான் சொல்வது இங்கு யார்க்கும் கேட்பது போல் தோன்றவில்லை.என்னை ஏதோ படுக்கையில் கிடத்தி தூக்கி செல்கிறார்கள் இது என்ன இவ்வளவு ஹார்ட் ஆக இருக்கிறது இதில் கிடத்தியா என்னை கொண்டு செல்கிறார்கள்.அவனின் எண்ணம் வந்து சென்றது அவன் ஏன் அப்படி சொன்னான் கண்ணில் நீர்த்துளி வந்தது.தந்தையும் தாயும் நினைவில் வந்து சென்றார்கள்.மீண்டும் ஏன் மயக்கமாக வருகிறது நான் எங்கு செல்கிறேன் என்னை எங்கு கொண்டு செல்கிறார்கள்.....
 
அன்று:

என்னையுமறியாமல் அவனைப் பார்த்ததும் ஒரு ஏளனம் தோன்றியது,அது அவனுக்கும் தெரிந்தது போல முகத்தை கடினமாக்கினான்.நான் தவறை உணர்ந்து புன்முறுவல் பூத்தேன் அவன் கைகுலுக்கி அமரச்சொன்னேன்.அவன் கை எவ்வளவு உறுதியாக இருக்கிறது.கையை விடவே மனமில்லை அவன் கையை என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக விளக்கிக் கொண்டது போல் தோன்றியது. என்ன பிரச்சனை என்பதை ஆங்கிலத்தில் கேட்டேன் அவன் ஆங்கிலத்திலேயே பதிலுரைத்தான்.நான் நிமிர்ந்து பார்த்தேன் என்ன ஒரு கச்சிதமான ஆங்கில உச்சரிப்பு ஒரு பிழையும் இல்லாமல் பேசுகிறானே என்று எனக்கு அவன் மீது ஒரு மரியாதை தோன்றியது. இவனின் விவரங்களை பின்னர் மேலாளரிடம் கேட்கவேண்டும் படித்தவன் போல இருக்கிறான் பின் எதனால் கீழ்நிலையில் வேலை பார்க்கிறான். நான் மேலாளரை அழைத்து அந்த சூப்பர்வைசரை வர சொன்னேன் அந்த தொழிலாளியையும் வர செய்தேன் இருவர் மீதும் தவறிருப்பதால் இருவரையும் நான் தனி தனியாக விசாரிக்கிறேன் அதற்காக ஒட்டு மொத்த உற்பத்தியை நிறுத்துவது நியாயமா என்று வினவினேன் என் நோக்கம் புரிந்து அமைதியானான் என்னை நம்புங்கள் நான் இதற்கு இன்று மாலைக்குள் ஒரு தீர்வு சொல்கிறேன் அனைவரையும் பணிக்கு திரும்ப சொல்லுங்கள் என்று வேண்டுகோள் வைத்தேன் சம்மதித்து திரும்பினான் மீண்டும் கை குலுக்க தோன்றவே கையை நீட்டினேன். அவன் புன்முறுவலுடன் கைகூப்பி வணக்கம் தெரிவித்து சென்றான். 
 
இன்று: 

யார் அவரின் கைபேசியில் பேசுவது.மறுமுனையில் பேசிய நபர் சொன்ன தகவல் கேட்டு நான் அதிர்ந்து நிலைகுலைந்துபோனேன்.என்னவாயிற்று அவருக்கு? கண்ணில் அருவி போல் நீர் கொட்டியது.மறுமுனையில் நான்கைந்து முறை ஹலோ ஹலோ என்று உரக்க கூவினார்கள்.கடைசியாக அவர் உங்களுக்கு தான் அழைத்துள்ளார்.நாங்கள் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறோம் அவரின் உறவினருக்கு சொல்லிவிடுங்கள் என்று சொல்லி பெரும் பாறாங்கல்லை என் தலையில் போட்டு விட்டு தொலைபேசியை வைத்து விட்டார்கள்.நான் உறைந்து நின்றேன் இது விபத்தா இல்லை தற்கொலையா எனக்கு ஒன்றும் ஓடவில்லை.நான் என் கைபேசியில் உள்ள மேலாளரின் நம்பரை தேடினேன் கைகள் நடுங்கின,குரல் வரவில்லை,அவரிடம் பேசும் போது மொத்தமாக உடைந்து போனேன் தகவலை தெரிவித்து விட்டு நான் என் இரு சக்கர வண்டியை எடுத்து விரைந்தேன் ஆஸ்பத்திரியை நோக்கி. என்ன நடந்தது ஐயோ நான் தான் இதற்கு காரணமா? அவரின் அலட்சியமா இல்லை நான் சொன்ன சொல்லின் வேகமா? அவருக்கு ஒன்றும் ஆகியிருக்க கூடாதே என் மனம் என்னவெல்லாமோ எண்ணி அரற்றியது.ஒருவாறு ஆஸ்பத்திரியை அடைந்தேன் எனக்கு முன்பே அங்கு பெரும் கூட்டம். அனைவரும் என்னை ஒரு குற்றவாளியை போல் பார்ப்பதாக எனக்கு தோன்றியது.சிறிது நேரத்தில் பெரியவரும் அவர் மனைவியும் ஓடி வந்தனர். சிலநொடிகளில் அவர் தனியார் ஆஸ்பத்திரி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார் அந்த ஒரு நொடி அவரை கண்ட நான் அங்கே மயங்கி விழுந்தேன்...... 
 
அன்று:

என் முன்னே மேலாளரை அழைத்து அந்த சூப்பர்வைசரையும் தொழிலாளியையும் வர செய்தார். அவர்களை விசாரிப்பதாகவும் ஆனால் மாலை வரை பொறுத்திருக்கவும் சொன்னார்.அவரின் அப்ரோச் எனக்கு பிடித்திருந்தது வேலைக்கு செல்லுமாறு வேண்டினார்.சம்மதித்து எழுந்தேன் கைகுலுக்க முனைந்தார்.நான் கை கூப்பி வணக்கம் தெரிவித்தேன் அவரின் முகம் ஒரு நொடி வாடியதை போன்று தோன்றியது.தொழிலாளர்களிடம் விவரத்தை கூறி பணிக்கு செல்லுமாறு கூறினேன் அனைவரும் ஏற்றுக்கொண்டு களைந்து சென்றனர். நான் என் பகுதியை நோக்கி விரைந்தேன். வேலைப்பளுவில் மற்றதை மறந்தே போனேன். சில மணித்துளிகள் கழித்து அவர் ரௌண்ட்ஸ் வந்தார். என்னைக்கண்டதும் சிறிது நேரம் நின்றார்.மதியம் சாப்பிட செல்வதற்கு முன் தன்னை வந்து பார்க்குமாறு கூறினார். மதியம் அவரின் சேம்பர்க்குள் சென்றேன். என்னை வரவேற்ற அவர் இம்முறை கைகுலுக்க வில்லை.ஏனோ மனதில் ஒரு நொடி சங்கடம் தோன்றி மறைந்தது.தனது பதவியின் கம்பீரத்தை காண்பித்ததாகவே எனக்கு தோன்றியது. நேற்றிரவு நடந்த சம்பவத்திற்கான காரண காரியங்களை விளக்கிய அவர் மேலும் அதற்கு அவர் எடுத்த நடவடிக்கையையும் விளக்கினார்.இரு தரப்பிலுமே தவறிருந்ததால் அவர் சொன்ன முடிவை ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு என்னை தள்ளினார் என்றே சொல்ல வேண்டும். சம்மதித்து வெளியேறிய என்னை ஒரு நிமிடம் என்றார்.......
 
 
இன்று: 

மீண்டும் பலரின் கூக்குரல்களும் இரைச்சல்களும் என் காதில் விழுந்தது.என்னை ஏதோ இடத்தில் கிடத்தியதை போல் உணர்ந்தேன்.குளிரூட்டப்பட்ட அறையின் சில்லிப்பை உணர முடிந்தது என்னால்.சிறிது நேரத்தில் எனது தந்தையின் சத்தமும் என் அன்னையின் அழுகையும் என்னால் கேட்க முடிகிறது ஆனால் கண்ணை திறந்து பார்க்க முடியவில்லை.என்னை வேறு எங்கோ எடுத்துசெல்வதை அறியமுடிந்தது.என்னவனை மட்டும் காண முடியவில்லையே?அவனின் கணீர் குரலும் கேட்கவில்லையே..அவனுக்கு தகவல் தெரிந்திருக்காதோ?இல்லை இங்கு எங்கேனும் தான் இருக்கிறானா? என்னை இங்கிருந்து காண்கிறானா? என்னை அவனால் இந்த நிலையில் பார்க்கவும் முடியவில்லை.அவனாலும் என்னை இந்த கோலத்தில் பார்க்க முடியாது என்று தெரியும். அதோ தூரத்தில் ஏதோ சத்தமும் பரபரப்பும் கேட்கிறது. பிடியுங்கள் தண்ணீர் தெளியுங்கள் என்று. ஆஸ்பத்திரி அல்லவா பலர் வருவார் போவார் என்னவன் எங்கேயோ.......?
 
அன்று:

அந்த சூப்பர்வைசரையும் தொழிலாளியையும் வரச் செய்து இருவரையும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தினேன். பிரச்சினையை சுமுகமாக முடித்த திருப்தியுடன் தொழிற்சாலையை மதியம் ரௌண்ட்ஸ் பார்க்க சென்ற பொழுது அவனை அவன் பணி புரியும் இடத்தில வைத்து கண்டேன்.ஒரு ஆண்மகனின் அழகு அவனின் ஆண்மையில் தான் இருக்கிறது முகத்தில் அல்ல என்று யாரோ சொன்னதன் அர்த்தம் இப்பொழுது விளங்கியது.அவனை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது.திரும்பிப்பார்த்த அவன் சார் என்றான் மதியம் என்னை என் அறையில் வைத்து பாருங்கள் என்று சொல்லி விட்டு அதிகார தோரணையில் நகர்ந்தேன். ஏன் அதற்குள் திரும்பி பார்த்தான்? என் கண்ணின் ஆவலே இன்னும் அடங்க வில்லை பின்னல்லவா என்னுடைய மனம்.மனம் ஒரு குரங்கு என்பது எவ்வளவு சரி என்று தோன்றியது. ஏன் என்னுடைய மனம் இப்படி அலைகிறது இதற்க்கு ஒரு கடிவாளம் போடவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.மதிய உணவு இடைவெளிக்கான சைரன் அலறியது.சிறிது நொடிகளில் அவன் வந்திருப்பதாக என்னுடைய காரியதரிசி சொல்லவும் அவனை வர சொன்னேன். கைகுலுக்கி மூக்குடைபட விரும்பாததால் வந்த அவனை இருக்கையில் அமர சொன்னேன் சிறிய ஏமாற்றம் அவன் முகத்தில் தோன்றியதாக எனக்கு உள்மனம் சொல்லியது. அதற்கு என்ன இப்படி தான் நம்மை உசுப்பேத்தி காலையில் அசிங்கப்பட வைத்தது ஆகவே அதை புறந்தள்ளிவிட்டு அவனிடம் ஒழுங்கு நடவடிக்கையின் அவசியத்தை பற்றி விளக்கினேன்.மறுப்பேச்சிலாமல் ஒத்துக்கொண்டான். கிளம்ப எத்தனித்த அவனிடம் ஒரு நிமிடம் என்றேன். என்ன என்பது போல் பார்த்தான். சில நிமிடங்கள் பேசலாமா என்றேன். சொல்லுங்கள் சார் என்றான். அவனின் சார் என்னை சங்கடப்படுத்தியது ஆனால் என் அந்தஸ்தின், பதவியின் அடையாளம் அது என்பதை புரிந்து கொண்டேன். உங்கள் தந்தை இறந்ததால் தாங்கள் கல்லூரிப்படிப்பை பாதியில் விட்டு விட்டு குடும்பத்தை காப்பாற்ற வாரிசு வேலை அடிப்படையில் வேலைக்கு சேர்ந்துள்ளீர்கள் என்பதை அறிந்தேன். ஏன் தபால் வழி நீங்கள் மேல்படிப்பை மேற்கொள்ளலாமே என்றதும் அவனின் கண்கள் ஒரு நிமிடம் கலங்கியதை போல் தோன்றியது அவன் அதெல்லாம் சரிப்படாது சார் என்று சொல்லியவாறு தேங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன் என்று கூறி விருட்டென்று வெளியேறினான்......
 
இன்று: 

மயங்கி விழுந்த என்னை பலர் தாங்கி பிடித்து தண்ணீர் தெளித்தனர் போலும் நான் விழித் தெளுந்த போது அவரை காணவில்லை.ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு அவர் ஆம்புலன்சில் ஏற்றிய காட்சி மீண்டும் என் கண்திரையில் ஓடியது எனக்கு கண்ணீர் எந்த நொடியிலும் வந்துவிடும் என்று தோன்றியது ஆனால் அழக்கூடாது,அவருக்கு ஒன்றும் நேர்ந்து விடாது என்னை விட்டு அவர் எங்கும் போய் விட மாட்டார் நான் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.யாரிடம் என்ன கேட்பது என்றும் தெரியவில்லை.பலர் என்னிடம் துக்கம் விசாரிக்க எனக்கு எரிச்சல் வந்தது அங்கு நின்ற மேலாளரிடம் சார்ஐ எங்கு கொண்டு செல்கிறார்கள் என்று கேட்டறிந்து பித்து பிடித்தவன் போல திசை தெரியாமல் அந்த ஆஸ்பத்திரியை நோக்கி வண்டியை செலுத்தினேன்.மனம் வேண்டிக்கொண்டே வந்தது அவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது நான் பல இடங்களில் நேர்ச்சை நேர்ந்துக்கொண்டேன்.ஒரு வழியாக ஆஸ்பத்திரியை அடைந்து விசாரணை கவுன்ட்டர் ஐ அடைந்து விசாரித்ததும் அவர் ஐ.சி.யு வில் இருப்பதாக கூறினார் அவரின் நிலைமை பற்றி கேட்டதும் இப்பொழுது தான் உள்ளே கொண்டு போயிருப்பதால் விவரங்கள் தெரியவில்லை என்று கூறி முடித்துக்கொண்டார். என்ன செய்வது யாரிடம் கேட்பது என்று எதுவும் தெரியாமல் வெளியில் வந்து வண்டியின் மேல் அமர்ந்த என் கண்களில் இருந்து இது வரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் மடைவெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
 
அன்று:

திரும்பிப்பார்த்த என்னிடம் நான் நினைக்க விரும்பாத என்னுடைய கடந்த கஷ்ட காலத்தை பற்றி வினவினார்.ஒரு நிமிடம் கண் கூட கலங்கி விட்டது இருப்பினும் அதை வெளிக்காட்ட விரும்பாமல் தேங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன் என்று கூறி அங்கிருந்து வெளியேறினேன்.நன்றாக படித்துக்கொண்டிருந்த நான் எதிர்பாராத என் தந்தையின் மரணத்தால் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயமும் என்னையும் எனது தங்கையையும் படிக்க வைக்கும் வசதி என் அன்னையிடம் இல்லாத காரணத்தால் மிகுந்த மனவேதனையுடன் தான் இந்த பணியில் சேர்ந்தேன்.வேலைக்கு சேர்ந்த சில வருடங்களிலேயே என்னுடைய படிப்பறிவையும் முன் ஏற்பட்ட ஒரு தொழிலாளர் பிரச்சனைக்கு நான் கூறிய யோசனையும் வைத்து அனைவருமாக சேர்ந்து என்னை இந்த யூனியன் லீடர் பதவியில் அமர்த்தி விட்டார்கள்.அன்றிலிருந்து என் பணியை நான் செவ்வனவே தான் செய்து வருகிறேன்.என் அன்னை கூட பலமுறை தபாலில் படிக்க சொல்லி வற்புறித்தியும் என்னால் அதை ஏற்க முடியவில்லை.இன்று அதையே அவர் கூறிய பொது கண் கலங்கி விட்டது.இவர் ஏன் என்னை பற்றி விசாரித்திருக்கிறார்? என்ன அவசியம் அவ்வளவு அக்கறையிருப்பின் வேலைக்கு சேர்ந்த புதிதிலேயே சொல்லியிருக்கலாம் அல்லவா ஒரு வருடம் கடந்திருந்தால் நான் ஒரு பட்டதாரி ஆகியிருப்பேன் அல்லவா? பெரிய முதலாளிக்கு இதை சிந்திக்கவா நேரம்.இன்று அவரின் மகன் போதனை செய்கிறது என்று கோபம் வந்தது.ஆனாலும் அவரின் முகத்தில் தோன்றியது பச்சாதாபம் இல்லை அக்கறை போன்றே என்ன வைத்தது. இவர் முன் இனி வர கூடாது அன்னையின் தொந்தரவை இவரும் ஆரம்பித்து விடுவார்.சில நாட்கள் அவரின் கண் முன் படாமலே தப்பித்து வந்தேன் ஆனால் இன்று சம்பள நாள் இவர் பொறுப்பேற்ற பின் வரும் முதல் மாதமானதால் அன்று அவர் தன் கைப்பட அனைவருக்கும் சம்பளம் தருவதாக கேள்விப்பட்டேன். மீண்டும் அவரை பார்க்க வேண்டும் என்பது சங்கடத்தை தந்தாலும் அடி மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாவதை உணர்ந்தேன்.....
 
இன்று: 

ஒரு புதிய சூழலில் இருப்பதைப்போன்று உணர்ந்தேன்.எங்கோ மிதப்பதாக தோன்றியது.காரணமில்லாமல் சிரிக்க தோன்றியது எனக்கு ஏதோ மருந்தினை செலுத்துகிறார்கள் அதன் தாக்கம் தான் இது போலும்.நான் என்ன நிலையில் இருக்கிறேன்.உயிரோடு தான் இருக்கிறேனா என்னால் ஏன் யாரையும் பார்க்க முடியவில்லை. மயக்கத்தில் இருக்கிறேனோ அதனால் தான் வெறும் சத்தம் கேட்கிறது.எனக்கு. இங்கு இனியும் வாழ வேண்டாம் எனக்கு ஒன்றும் செய்யாதீர்கள் அதனால் ஒரு ப்ரோயஜனமும் இருக்க போவதில்லை. ஏன் என்னை என் இஷ்டத்திற்கு வாழவும் விட மறுக்கிறீர்கள் சாகவும் விட மாட்டேன்கிறீர்கள்.நான் என்னவெல்லாமோ புலம்பினேன் ஆனால் இதை யாரும் கேட்பதாக தெரியவில்லை. அவன் எங்கிருக்கிறான்.இங்கு எங்கோ இருக்கிறான் என்று தெரிந்தால்..... அவனை நினைக்கும் பொழுது மட்டும் எப்படி எனக்கு புன்னகை வருகிறது என் முகத்தில் மாறுதல் தெரிகிறதா? யாரோ என்னை தட்டுவது போல உணர்கிறேன் ஆனால் என்னால் ரியாக்ட் செய்ய முடியவில்லையே ஏன்.........?
 
அன்று:

எனக்கு சங்கடமாக போய் விட்டது ஏன் அவனிடம் இதை பற்றி பேசினோமோ என்று இருந்தது.அதற்கு பிறகு சில நாட்கள் அவனை பார்க்க முயன்றும் அவன் என் கண்ணில் தென்படவில்லை.ஏன் என்றும் புரியவில்லை.பலமுறை அவனை போய் பார் என்று உள்மனம் சொல்லும்போதெல்லாம் அதை ஏற்காமல் இருந்தேன். இன்று அனைவரையும் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிட்டியது நான் பொறுப்பேற்ற பின் வரும் முதல் சம்பள நாள் என்பதால் நானே அனைவருக்கும் கொடுக்க விரும்பினேன். இன்று நீ என்னிடம் தப்ப முடியாது என்று புன்முறுவல் கொண்டேன். கல்லூரியில் படிக்கும் போது நான் ஆண்கள் பக்கம் ஈர்க்கப்படுவதை உணர்ந்தாலும் அதை எதிர்கொள்ள தைரியம் இன்றி இத்தனை காலம் இருந்து விட்டேன் ஆனால் இனிமேல் என்னால் முடியாது.ஒவ்வொருவராக வந்தனர்.தொழிலாளர்கள் வந்ததும் மேலாளரை அழைத்து யூனியன் லீடர் எங்கே என்று வினவினேன்.வர சொல்கிறேன் சார் என்றவர் அவனுடன் திரும்பி வந்தார். அவனை கண்டதும் முகம் புன்னகை பூத்தது.அனைவரையும் எனக்கு ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துங்கள் என்று பணித்தேன்.என்னை கூர்ந்து ஒரு நொடி நோக்கினான் பின்னர் சரி சார் என்று கருமமே கண்ணாக அவன் அறிமுகம் செய்ய நான் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை அவன் என்னருகில் இருக்கிறான் அவனின் உதடுகளையும் அவனின் கணீர் என்ற உச்சரிப்பையுமே உள்வாங்கிக்கொண்டிருந்தேன். அறிமுகப்படலம் முடிந்ததும் இவனின் சம்பள கவர் வந்தது,அனைவரையும் கைகுலுக்கி கவரை கொடுத்த நான் இவனுக்கு வணக்கம் தெரிவித்து கவரை கொடுக்கவும் ஒரு நிமிடம் நிதானித்த அவன் என் கையை பற்றி தேங்க்ஸ் என்று சொல்லி ஒரு புன்னகை பூத்தான். என் கண் இமைகள் மூட மறந்தது ஒரு நொடி அவனின் ஸ்பரிசம் என்னை என்னவோ செய்தது.உள்மனம் என்ன என்னவோ சொல்லி என்னை வதைத்தது. அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.ஹாலின் முக்கிற்கு சென்ற அவன் என்னை திரும்பி பார்த்து மீண்டும் ஒரு புன்னகை புரிந்து மறைந்தான்.........
 
இன்று:

கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டுவதைக்கூட உணராமல் நான் வெகு நேரம் வண்டியிலேயே அமர்ந்திருந்தேன்.சிறிது சுயநினைவு வந்ததும் மீண்டும் அவரின் நினைவு, கைக்கடிகாரத்தை பார்த்தபொழுது சில மணித்துளிகள் கடந்து விட்டது என்பதை அறிந்து விசாரணை முகப்பிற்கு சென்று என்னவாயிற்று என்று வினவினேன்.உபயோகமாக எந்த ஒரு தகவலையும் அந்த பெண் தரவில்லை மாறாக சொன்னதையே திருப்பி சொல்லிக்கொண்டிருந்தாள்.அங்கு இருந்த இருக்கையில் அமர சென்றேன்,எனக்கு தெரிந்த பலரின் முகம் அங்கு கண்டேன். எனக்கு மெதுவாக தெம்பு வந்தது. அனைவரும் நடந்த விபத்தை பற்றி பேசிகொண்டிருந்தார்கள்,சிலர் விவரித்தது அருகில் இருந்து பார்த்ததை போல் இருந்தது.சிலர் பத்திரிக்கையில் படிக்கும் செய்தியை போன்று சுவாரஸ்யமாக கூறிக்கொண்டிருந்தனர்.உண்மையில் என்ன நடந்தது என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்.மீண்டும் யோசித்தேன் இது விபத்து தானா? இல்லை..... நினைக்கவே எனக்கு பகீர் என்றது.அத்தனை விரக்தியா? இல்லை என் மேல் உள்ள கோபமா? பலர் கூறுவதை பார்த்தால் இவர் மீது தான் தவறு என்பதைப்போல் தோன்றுகிறது.முதலில் அவர் எழுத்து வந்தால் போதும் மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம்.இத்தகைய சூழலுக்கு ஏன் தன்னை உட்படுத்திக்கொண்டார்? என் மீது அத்தனை நேசமா? இல்லை நான் சொன்ன அந்த சுடுசொல்லா? ஐ.சி.யு.வின் அருகில் ஒரு பரபரப்பு.... மிகுந்த படபடப்புடன் அங்கு நோக்கி விரைந்தேன்........
 
அன்று:

முதலாளி சம்பளத்தை தன் கையால் அளிக்க போகிறார் என்பதை அறிந்ததும் என்னையுமறியாமல் ஒரு சங்கடமும் அதே நேரம் ஒரு இனந்தெரியாத மகிழ்ச்சியும் உண்டாவதை உணர முடிந்தது.இது எதனால் என்று புரியவில்லை ஆனாலும் ஒரு எதிர்பார்ப்புடனே அங்கு சென்றேன்.சென்ற சில நொடிகளில் சக தொழிலாளர்களை அறிமுகம் செய்து வைக்க பணிக்கப்பட்டேன் மீண்டும் அவரை அருகில் பார்த்தேன் ஏனோ அவரின் முகத்தில் ஒரு விஷமப்புன்னகை தோன்றி மறைந்ததாக கருதினேன்.அவர் மீது தான் என்ன ஒரு வாசனை இப்படி அருகிலேயே இருந்து விடலாம் போன்ற ஒரு எண்ணம். நமக்கு தான் எப்பொழுதும் ஒரு வியர்வையின் நாற்றம் அவரின் அருகில் நிற்க கூட மனம் கூசியது ஆனால் அவர் நான் சொல்லும் எதையும் கவனிக்காமல் என்னையே பார்ப்பது போல் தோன்றியது. அவர் எதற்கு என்னைப்பார்க்க வேண்டும் என்று எண்ணினாலும் அவர் என் மீது ஒரு கரிசனம் வைத்திருக்கிறார் என்பதை மட்டும் என்னால் உறுதியாக உணர முடிந்தது. அனைவருக்கும் சம்பளத்தை கொடுக்கும் போது கை குலுக்கி கொடுப்பதைக்கண்டேன். இந்த முறை அவர் கை குலுக்க வந்தால் மறுக்க கூடாது என்றெண்ணினேன் அனைவருக்கும் கொடுத்து விட்டு என் கவரை எடுத்தவர் என்ன நினைத்தாரோ கை கூப்பி வணக்கம் தெரிவித்து அதை என் கையில் கொடுத்தார்.கவர் கொடுத்த கையை பற்றி குலுக்கி தேங்க்ஸ் என்று சொன்னேன்,அவரின் அதிர்ச்சி எனக்கு அப்பட்டமாக தெரிந்தது அதை நினைத்து மகிழ்ந்து புன்னகை புரிந்தேன். அவரிடமிருந்து ஒரு வித்தியாசமான புன்னகை வெளிப்பட்டது அது அதிர்ச்சி கலந்த புன்னகையா இல்லை வெறும் அதிர்ச்சியா என்று என்னால் ஊகிக்க முடியவில்லை எனினும் அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையே தந்தது. அவ்விடத்தை விட்டு நகர்ந்து ஹாலின் முக்கிற்கு சென்றதும் அவரை திரும்பி பார்க்க என் மனம் சொல்லியது திரும்பிபார்த்த நான் அவர் இன்னும் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை அறிந்து திருப்தியுடன் மீண்டும் ஒரு புன்னகையை சிந்தினேன்.
அன்றைய தினம் முழுவதும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியிலேயே திளைத்தேன் என்று தான் சொல்ல வேண்டும். என்னவாயிற்று எனக்கு என்று நான் என்னையே கேட்டுக்கொண்டேன். அந்த தவிப்பும்,அவரின் அருகாமையும் என்னை பரவசப்படுத்தியது மட்டும் உண்மை.எனக்கு பெண்களிடம் பெரிதாக நாட்டம் என்று இருந்தததில்லை ஆனால் எந்த ஆண்மகனிடமும் நான் இப்படி உணர்ந்ததுமில்லை.இது என்ன உணர்வு என்று புரியவில்லை ஆனால் அதை ஆராயவும் மனம் விரும்பவில்லை. எது வரை போகிறது என்று தான் பாப்போம் என்று தீர்மானித்தேன்.ஆனால் உள்மனம் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது அவரிடம் அதிகம் நெருங்காதே என்று என்னை எச்சரித்துக்கொண்டே இருந்தது.உள்மனம் சொல்வதை கேட்டா நாம் அனைவரும் நடக்கிறோம் நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
 
இன்று:

என் கன்னத்தை தட்டி என் பெயரை சொல்லி யாரோ கூப்பிடுகிறார்கள் எனக்கு பதில் சொல்ல தோன்றுகிறது ஆனால் முடியவில்லை. என் காதருகில் வந்து யாரோ ஒருவர் என் பெயரை சொல்லி கேன் யு ஹியர் மீ என்கிறார்கள். எஸ் ஐ கேன் வெரி வெல் ஹியர் யு என்று சொல்கிறேன் ஆனால் அது அவருக்கு கேட்டதா என்று தெரியவில்லை. மெதுவான குரலில் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். எனக்கு அவர்கள் பேசுவது புரியவில்லை எனக்கு மீண்டும் நினைவுகள் அவனை நோக்கி செல்கிறது. அவன் எங்கிருக்கிறான்? என்ன செய்து கொண்டிருக்கிறான். இங்கு எங்கேனும் இருக்கிறானா? அவனை வந்து என்னை கூப்பிட சொல்லுங்கள் நான் கண்டிப்பாக அவனிடம் பேசுவேன் அவனை பார்த்தாலே நான் சுறுசுறுப்பாகி விடுவேன். உங்களுக்கு ஏன் இது புரியமாட்டேன்கிறது.நீங்கள் என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும் நீங்கள் செய்ய முடியாததை அவனின் குரல் செய்து விடும். அவனின் குரலுக்கு உள்ள சக்தி நீங்கள் அறியாதது அதை நான் மட்டுமே முழுவதுமாக அறிந்தவன். எங்கே அவன்......என்னவன்....
 
அன்று:

அவனின் புன்னகை என்னை என்னவோ செய்தது,அவனிடம் ஓடி சென்று நான் தேடியது உன்னை போன்ற ஒரு ஆண்மகனைத்தான் என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது.பொதுவாக என்னை விட்டு விலகி விலகி செல்லும் அவன் ஏன் இன்று என்னிடம் இப்படி நடந்து கொண்டான். நீ நிற்கும் இடத்தில் நீ மட்டும் அல்லாது மற்றவரையும் ஆண்மகனாக மாற்றி விடுகிறாய் அது எப்படி? அவனின் நினைவு என்ற ஆக்கிரமிப்பு என்னை விட்டு அகல வெகு நேரம் பிடித்தது.அதற்கு பின் தினமும் அவனை ஒரு முறையேனும் பார்க்கவில்லையெனில் அன்றைய தினம் என்னவோ போல் இருப்பதாக உணர்ந்தேன்.நாங்கள் இருவரும் தனியாக சேர்ந்து இருக்க ஒரு சந்தர்ப்பம் கிட்டியது. மும்பையில் அனைத்திந்திய அளவில் ஒரு வொர்க்க்ஷாப் நடக்கவிருந்தது அதற்கு அனைத்து சிறுகுறு தொழிற்சாலை யூனியன் லீடர் மற்றும் முதலாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.இரண்டு தின கூட்டம் அது.அதை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து மேலாளரை அழைத்து அதை பற்றி கூறியதும் அவர், சார் அந்த யூனியன் லீடர் எங்கும் வர மாட்டார் சார் இது போன்று பலமுறை அழைத்தும் உபதலைவரை தான் அனுப்புவார் ஆகவே இதை மறந்து விடுங்கள் சார் இதனால் நமக்கு செலவு தானேயன்றி உபயோகம் ஒன்றும் இல்லை என்று புலம்பினார். நீங்கள் அவரை அழைத்து வாருங்கள் நான் பேசிக்கொள்கிறேன் என்று கடிந்து அனுப்பினேன். சில நிமிடங்களில் என் கதவை திறந்து வந்தான். அவன் உள்ளே நுழைந்ததுமே அவனின் வியர்வை மனம் அவனின் ஆண்மையை எனக்கு மீண்டும் ஒரு முறை பறை சாற்றியது. 
புன்னகைத்து அவனை அமர சொன்னேன். அந்த கூட்டத்தின் அவசியத்தையும் அவன் அதற்கு போக வேண்டியதன் காரணத்தையும் கூறினேன். அவனிடம் நானும் உங்களுடன் வருகிறேன் என்று அழுத்திக்கூறினேன்.பதில் ஏதும் கூறாமல் என்னால் முடியாது சார் எப்பொழுதும் போல் உபதலைவரை வரச்சொல்கிறேன் என்று கூறி அறையை விட்டு வெளியேறினான்.
 
இன்று:

ஐ.சி.யு.வின் அருகில் பரபரப்பை கண்டதும் அங்கு நோக்கி ஓடினேன்.ஒரு மருத்துவர் பெரியவரிடம் ஏதோ கூறிக்கொண்டிருக்க அவரை சுற்றி பலர் இருக்க எனக்கு அங்கு போகவும் தயக்கம் ஆனால் என்னவாயிற்று என்று அறியவும் மனம் தவித்தது.ஒவ்வொரு நொடியும் எனக்கு யுகமாக கழிந்தது.அனைவரும் சோகமே உருவாக இருக்க எனக்கு மேலும் பதற்றம் கூடியது. நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அங்கு சென்றேன். என்னைக்கண்ட பெரியவர் புருவத்தை உயர்த்தி ஒரு நிமிட ஆச்சரியத்தைக்காட்டினாலும் மறு நொடி சோகத்தில் ஆழ்ந்தார்.நான் அவரிடம் கேட்க துணிவில்லாமல் அருகில் இருந்தவர்களிடம் சார் எப்படி இருக்கிறார் என்று வினவினேன். அவரிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை அவர்க்கு நினைவு திரும்பவில்லை என்பதை சொல்லவும் எனக்கு கண்ணீர் பீறிட்டு வந்தது.அவரை பார்ப்பதற்கு யாரையும் அனுமதிக்கவுமில்லை.அவரின் மனம் எனக்கு தெரியும் என்னை கண்டிப்பாக தேடுவார் நான் போய் பேசினால் அவர் மறுமொழி பேசுவார் ஆனால் இதை நான் யாரிடம் எப்படி சொல்வது? எனக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது ஆனால் என்ன செய்வது எப்படி செய்வது என்று தான் தெரியவில்லை,....
 
அன்று:

அன்றைய தினத்திற்கு பின்பு அவரை தினமும் ஒரு முறை பார்ப்பது வழக்கமாகி விட்டது. அவர் அழைப்பதாக எனக்கு தகவல் வரவும் நான் அவரை காண அவரின் அறைக்கு சென்றேன்.என்னை இன்முகத்துடன் வரவேற்ற அவர் மும்பையில் நடக்கவிருக்கும் வொர்க்க்ஷாப் பற்றியும் அதற்கு அனைத்து சிறுகுறு தொழிற்சாலை யூனியன் லீடர் மற்றும் முதலாளிகள் அழைக்கப்பட்டிருந்ததையும் விளக்கினார் மேலும் அதற்கு தானும் உடன் வருவதாக அழுத்தி கூறினார்.வயது வந்த தங்கை இருப்பதாலும் தாயை தனியாக விட்டு இது வரை எங்கும் சென்றதில்லை என்பதாலும் நான் வழக்கம் போலவே மறுத்தேன்.உபதலைவரை அழைத்துச்செல்லுங்கள் என்று கூறி வெளியேறினேன்.மறுநாள் உபதலைவர் அவரின் அறைக்குள் அழைக்கப்படும் செய்தி அறிந்து படபடப்பாக இருந்தது. நான் ஏன் இதற்கு பதறுகிறேன் என்று புரியவில்லை.உபதலைவர் வரும்வரை என் மனம் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது.சில நிமிடங்களுக்கு பிறகு வியர்வை சிந்த வந்தார் உபதலைவர்.நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் அவர் இப்படி வந்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. என்னிடம் வந்த அவர் பெரியவர் எவ்வளவோ தேவலாம் சின்ன முதலாளிக்கு ஏன் இப்படி கோபம் வருகிறது பொரிந்து தள்ளி விட்டார் என்றார். என்னவாயிற்று என்று வினவவும் தன்னிடம் சில கேள்விகளை கேட்ட பின் ஆங்கிலத்தில் என்ன என்னவோ கூறினார்.ஒன்றும் புரியாமல் முழித்த என்னிடம் இது கூட புரியாமல் மும்பைக்கு வந்து என்ன செய்ய போகிறீர்கள் எனக்கு தெரியாது ஆங்கிலம் படித்து விட்டு வாருங்கள் இல்லை ஆங்கிலம் தெரிந்த உங்கள் தலைவரை வரச்சொல்லுங்கள் என்று சொல்லி நீங்கள் போகலாம் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டார் என்றார். 
அவரின் திருவிளையாடல் எனக்கு புரிந்தது ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் சரி போங்கள் நான் அவரிடம் பேசுகிறேன் என்று கூறிய எனக்கு ஏனோ மனம் மகிழ்ச்சியில் திளைப்பதாகவும் தோன்றியது. ஏன் இப்படி என்று யோசித்துப்பார்த்தால் நான் இதை தான் எதிர்பார்தேனோ என்றும் தோன்றியது 
 
இன்று:

மருத்துவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.என்னை பற்றி தான் ஏதோ சொல்கிறார்கள் என்பது மட்டும் கேட்கிறது ஆனால் என்னால் யாரையும் பார்க்கத்தான் முடியவில்லை.கதவை திறக்கும் சத்தமும் கதவிற்கு அப்பால் இருந்து சில விசும்பல்களும் கேட்டது.அவன் அங்கு தான் இருப்பானோ? கதவை திறந்து மருத்துவர்கள் வருவதை பார்த்து ஓடி வந்திருப்பான் அல்லவா?அவன் என்ன நிலையில் இருக்கிறான்,அனைத்தையும் விட்டு விட்டு அவன் மடியில் போய் படுத்துக்கொள்ளவேண்டும் போல தோன்றியது.என் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது,அருகில் இருந்த செவிலிப்பெண் டாக்டர் என்று கூவி கொண்டு வெளியில் ஓடினாள்.
 
அன்று:

அவன் என் அழைப்பை உதாசீனப்படுத்தியதை எண்ணி எரிச்சலடைந்தேன்.ஆனால் மறு நொடியே இவனை என் வழிக்கு கொண்டு வருகிறேன் பார் என்று எனக்குளே சபதம் போட்டுக்கொண்டேன்.என்னுடனா வர மாட்டேன்கிறாய்? நான் யார் என்பதை உனக்கு புரியவைக்கிறேன் பார் என்று கறுவிக்கொண்டேன்.அன்றைய தினம் முழுவதும் அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.ஒரு யோசனை நடு இரவில் தோன்றியது.அதை எப்படி செயல்படுத்துவது என்று திட்டமிட்டு அப்படியே தூங்கியும் போனேன்.மறு நாள் உபதலைவரை வரப்பணித்தேன். சில நொடிகளில் ஒரு நடுத்தர வயதில் ஒருவர் நுழைந்தார். முகத்தை கடு கடு என வைத்துக்கொண்டே இதற்கு முன்பு எத்தனை முறை தொழிற்சாலை நிமித்தம் வெளியில் சென்று கூட்டத்தில் கலந்துள்ளீர்கள் என்று கேட்டேன். ஏதோ ஒரு பதில் கூறினார். அடுத்ததாக என் அம்பை எய்தினேன்,ஆங்கிலத்தில் சரமாரியாக பல கேள்விகளை கேட்டேன்,அவர் பேந்த பேந்த விழித்ததை பார்க்க எனக்கே பரிதாபமாகத்தான் இருந்தது.அதற்காக நாம் எண்ணியதை முடிக்க வேண்டாமா என்று எண்ணிக்கொண்டு என்ன பதில் தெரியவில்லையா? இல்லை சொன்னதே புரியவில்லையா என்று மேலும் சினந்தேன்.அவர் என்னை நோக்கி மன்னிக்கவும் எனக்கு இங்கிலீஷ் தெரியாது என்று பதறினார்.என் வேலை சுளுவாயிற்று. ஆங்கிலம் தெரியாமல் மும்பை வந்து என்ன செய்யப்போகிறீர்கள் ஒன்று போய் ஆங்கிலம் கற்றுக்கொண்டு வாருங்கள் இல்லை ஆங்கிலம் தெரிந்த உங்கள் தலைவரை வரச்சொல்லுங்கள் என்று சொல்லி நீங்கள் போகலாம் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டேன். அவர் வியர்த்து வெளியேறியது எனக்கு அப்பட்டமாக தெரிந்தது.இதெற்கெல்லாம் வருத்தினால் முடியுமா என்று என் மனமே என் மனதை சமாதானம் செய்தது.ஒரு தடையை ஏற்படுத்தியாகி விட்டது இதன் விளைவு இன்று அல்லது நாளை தெரியும் அது வரை பொறுத்திருப்போம் என்று எண்ணி மற்ற அலுவல்களை கவனிக்கதொடங்கினேன்.
 
இன்று:
 
என்ன செய்வது எப்படி செய்வது என்று தெரியாமல் குழம்பி இருந்த தருணத்தில் நர்ஸ் ஓடி வந்து மருத்துவரிடம் டாக்டர் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது எனவும் இஸ் இட் என்று கூறி கதவை திறந்து உள்ளே ஓடினார்கள்.இதை கேட்ட என் மனம் தவித்தது அருகில் இருந்த பெரியவரும் அவரின் அம்மாவும் கண் கலங்கினதை கண்டேன்.என்னவன் மீது கோபம் வந்தது. அது என்ன என்னவன்? இந்த உரிமையை அன்று வந்த போது காண்பித்திருந்தால் இத்தகையதொரு துயரம் நடந்திருக்குமா என்று என் மனம் என்னை கரித்துக்கொட்டியது.அதை அடக்கிகொண்டே ஒன்றும் நேர்ந்திருக்காது என்று என்னையே தேற்றிக்கொண்டேன்.ஆனால் சிறிது நேரத்திற்கு முன் தானே அவரிடம் பெரிய ஒத்துழைப்பு இல்லை என்று சொன்னார்கள்,ஆனால் இப்பொழுது கண்ணீர் வருகிறது என்கிறார்களே என்று எண்ணினேன். என்ன நினைத்திருப்பார் என்னை நினைத்திருப்பாரோ? என்றெண்ணியதும் என்னிலும் கண்ணீர் வழிந்தது.
 
அன்று:
 
என் மனம் இதை தான் எதிர்பார்த்தா?ஏன் இது எல்லையில்லா ஆனந்தம் அடைகிறது. உபதலைவரின் வியர்க்க விறுவிறுக்க வந்த பிம்பம் மீண்டும் மனதில் நிழலாட சிரிப்பு வந்தது.இவரின் தந்திரம் என்னை ஆச்சரியப்படுத்தியது,மீண்டும் என்னை அழைப்பார் என்று காத்திருந்தேன். ஆனால் அன்று முழுவதும் அழைப்பு வரவில்லை.மீண்டும் உபதலைவரை அழைத்து என்னவாயிற்று என்று கேட்கலாமா என்று எண்ணிய மறுநிமிடம் வேண்டாம் அவர் இருக்கும் நிலையில் மீண்டும் கேட்டால் எனக்கு இந்த பதவியே வேண்டாம் என்று ஓடி விடுவார் என்று நிதர்சனமாக தெரிந்தது.மறுநாள் காலை அவர் உபதலைவரை அழைப்பதாக ப்யூன் வந்து சொன்னதுமே உபதலைவர் புலம்ப துவங்கிவிட்டார்.தம்பி நீங்கள் தான் என்னை காப்பாற்ற வேண்டும் நீங்களும் வாருங்கள் என்று கெஞ்சாத குறையாக கேட்டார்.அது முறையல்ல உங்களைத்தான் அழைத்திருக்கிறார் ஆகவே நான் வருவது சரியாக இருக்காது என்று விளக்கி அவர் ஏதேனும் கேட்டால் என்னிடம் சொல்லிவிட்டேன் நீங்கள் தயவு செய்து அவரை அழைத்து கேட்டுகொள்ளுங்கள் என்று பணிவுடன் சொல்லிவிடுங்கள்.பதறாதீர்கள் என்று சொல்லி நான் பதற்றத்துடன் காத்திருந்தேன்.ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது.சில நிமிடங்கள் கழித்து அவர் என்னை அழைப்பதாக வந்து ப்யூன் சொன்னான்.உள்ளுக்குள் பதற்றம் தோன்றினாலும் அதை வெளிக்காட்டாமல் அவரின் அறைக்குள் நுழைந்தேன்.ஒரு பக்கம் பரிதாபமாக உபதலைவர் இருக்க எதிரில் கம்பீரமாக சிடுசிடு வென இவர் இருந்தார்.இவருக்கு தான் அது ஓட்ட மாட்டேன்கிறதே பின் ஏன் எப்படி? அந்த சாந்தமான முகம் தான் எத்தனை அழகு என்று எண்ணிக்கொண்டேன். நான் அவரை அப்படி பார்த்ததை கவனித்த அவரின் முகத்தில் ஒரு நொடி சாந்தம் திரும்பியது.பின் மீண்டும் வேண்டுமென்றே முகத்தில் கடுமையை கொண்டு வர முயற்சி செய்தார்.என்னை இருக்கையில் அமர சொல்லிவிட்டு வரும் சனிக்கிழமை காலை மும்பையில் கூட்டம் துவங்குகிறது உங்கள் உபதலைவரால் வர முடியாது என்று சொல்லி விட்டார். என்னுடன் யார் வர போகிறீர்கள் எனக்கு மற்ற ஏற்பாடுகளை பார்க்க சொல்ல வேண்டும் என்று சொல்லவும் நான் உபதலைவரை பார்க்க அவர் பரிதாபமாக தம்பி நீங்கள் முதலாளியுடன் போய் வாருங்கள் நான் ஆங்கிலம் தெரியாமல் போய் என்ன உபயோகம் இருக்க போகிறது.எனக்கு உள்ளுக்குள் எரிச்சல் வந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தேன்.அவர் என்னை கிண்டலாக பார்த்து நீங்கள் இருவரும் பேசி ஒரு முடிவை இன்று மதியத்திற்குள் சொல்லுங்கள் என்றார்.இது மிகவும் முக்கியமான கூட்டம் ஆகவே இருவரில் ஒருவர் கண்டிப்பாக என்னுடன் வருகிறீர்கள் என்று கட்டளை தொனிக்கும் விதத்தில் கூறி கை கூப்பவும் வேறு வழியின்றி இருவரும் வெளியில் தள்ளப்பட்டோம்.....
 
இன்று:
 
செவிலிப்பெண் ஓடிய சில நொடிகளில் பலர் ஓடி வரும் சத்தம் கேட்டது.என்னுடைய கண்ணீரை யாரோ பஞ்சு போன்ற ஒன்றை வைத்து தொடைத்ததை உணர்ந்தேன். டாக்டர்கள் செவிலிப்பெண்ணிடம் பல கேள்விகளை துளைத்து துளைத்து கேட்டனர். என் பெயரை சொல்லி அழைத்தனர்.நான் பேச முயல்கிறேன் என் குரல் வழக்கம் போலவே அவர்களுக்கு கேட்கவில்லை போலிருக்கிறது,மீண்டும் அழைக்கிறார்கள் எனக்கு இந்த முறை சலிப்புதான் வந்தது பேசவில்லை,பேசினால் மட்டும் கேட்கவா போகிறது என்று பேசாமல் இருந்துவிட்டேன். டாக்டர்கள் தங்களுக்குள் ஏதோ பேசி வெளியில் செல்வதாக தோன்றியது சில நொடிகளில் பரபர வென்று சத்தம். கண்ணா என்று என் அன்னையின் குரல் கேட்டது என்னை செல்லமாக என் அன்னை அழைக்கும் குரல் அது எனக்குள் மீண்டும் கண்ணீர் துளிர்த்தது அம்மா என்று உரக்க அழைக்கிறேன் என் அம்மாவிற்கு கேட்க வில்லையா அவர்கள் அழுகிறார்கள்,எனக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று கை விரைகிறது ஆனால் என்னால் நகரவோ கையை தூக்கவோ முடியவில்லை.என் அன்னையின் தேம்பலும் தொடர்ந்து கம்பீரமான என் தந்தையின் குரலும் கேட்டது அவரும் அதிசயமாக கண்ணா என்று அழைக்கிறார் ஒரு போதும் என் பெயர் அல்லாது அழைக்காத என் தந்தையா என்னை கண்ணா என்று அழைப்பது எனக்கு ஆச்சர்யம் மற்றும் துக்கம் தொண்டையை அடைத்தது.
டாக்டர்கள் அவரிடம் தொடர்ந்து பேசுங்கள் அவரிடம் ஏதாவதொரு அசைவு இருந்தால் போதும் பிறகு சுலபம் என்கிறார்கள்.என் அன்னை ஏதெல்லாமோ சொல்லி அரற்றுகிறார் 
என் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிகிறது,இம்முறை என் அன்னையின் கரம் அதனை துடைக்கிறது என் அன்னையின் ஸ்பரிசம் என்னால் உணர முடிகிறது.அம்மா எங்கேயும் போகாதீர்கள் இங்கு இருங்கள் என்று சொல்கிறேன்.ஆனால் அவர்களுக்கு ஒன்றும் கேட்க வில்லை. மருத்துவர்கள் ஏதோ சொல்ல அழுது கொண்டே அன்னை செல்வதாக தோன்றியது.அம்மா அம்மா அம்மா என்று நான் அழைக்கிறேன்........
 
அன்று:
 
மறுநாள் காலை வந்ததும் உபதலைவரை அழைத்து வர சொன்னேன்.உபதலைவர் பதற்றத்துடன் வந்தார் சிடுசிடுப்பை சிறிதும் குறைக்காமல் என்ன முடிவு செய்தீர்கள் என்று சிறிது கடுமையாகவே கேட்டேன் அவர் பதற்றத்தில் சார் நான் வரவில்லை தலைவர் வருவார் சார் என்றார்.எனக்கு சிறிதாக புன்னகை தோன்றி மறைந்தது இருப்பினும் அவர் ஒத்துக்கொண்டாரா? என்று வினவினேன். இல்லை சார், நான் வரவில்லை என்று சொன்னால் அவர் வந்து தானே சார் ஆக வேண்டும் என்று சொல்லவும் எனக்கு மகிழ்ச்சி தோன்றியது.இருங்கள் அவரை அழைத்தே கேட்டு விடலாம் என்று சொல்லி அவனை வரச்சொல்லி அனுப்பினேன்.கதவை தட்டி உள்ளே நுழைந்தான்.அவனை பார்ததுமே ஏன் என் மனம் குழைகிறது என் சிடுசிடுப்பை வலுக்கட்டாயமாக முகத்தில் கொண்டு வந்தேன். வந்தவன் என்னையே குறுகுறுவென பார்க்கவும் ஒரு நொடி புன்னகை என்னையும் அறியாமல் வந்து போனது காரியம் ஆகும் வரை மாற கூடாது என்று மீண்டும் விறைப்பாக வைத்துக்கொண்டேன். எனக்கே என்னை நினைத்து சிரிப்பு வந்தது.அதே விறைப்புடன் அவனை இருக்கையில் அமர சொல்லிவிட்டு வரும் சனிக்கிழமை காலை மும்பையில் கூட்டம் துவங்குகிறது உங்கள் உபதலைவரால் வர முடியாது என்று சொல்லி விட்டார். என்னுடன் யார் வர போகிறீர்கள் எனக்கு மற்ற ஏற்பாடுகளை பார்க்க சொல்ல வேண்டும் என்று கூறினேன்.நான் சொல்லி முடிக்கவும் உபதலைவர் அவனை பார்த்து தம்பி நீங்கள் முதலாளியுடன் போய் வாருங்கள் நான் ஆங்கிலம் தெரியாமல் போய் என்ன உபயோகம் இருக்க போகிறது என்று என்னவோ நான் சொல்லி கொடுத்த மாதிரி சொல்லி என்ன சரி தானே என்பதை போல் என்னை ஒரு பார்வை பார்க்கவும் நான் கிண்டலாக அவர்களை பார்த்து நீங்கள் இருவரும் பேசி ஒரு முடிவை இன்று மதியத்திற்குள் சொல்லுங்கள் என்றேன்.இது மிகவும் முக்கியமான கூட்டம் ஆகவே இருவரில் ஒருவர் கண்டிப்பாக என்னுடன் வருகிறீர்கள் என்று கட்டளை தொனிக்கும் விதத்தில் கூறி கை கூப்பவும்.அவர்கள் வெளியேறினார்கள்.வெளியேறும் போது என்னுள் வெற்றிபுன்னகையும் அவனிடம் குழப்ப முகமும் கண்டேன்.........
 
இன்று:

நர்ஸ் உடன் உள்ளே சென்ற மருத்துவர்கள் சில நிமிடங்களுக்கு பின்பு வெளியில் வந்து பெரியவரையும் அவரின் அம்மாவையும் அவசர சிகிச்சை பிரிவிற்குள் அழைத்துச்சென்றனர்.வெளியில் நின்ற எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. ஏதேனும் கெட்ட செய்தியாக இருக்குமோ இருக்காது என்று நானே என்னிடம் சொல்லிகொண்டேன். உள்ளே சென்றவர்கள் வர சில நிமிடங்கள் ஆனது அந்த ஒவ்வொரு நொடியும் எனக்குள் நிகழ்ந்த அந்த துயரம் நான் இது வரை உணர்ந்திராதது. இருவரும் கண்ணீர் மல்க வெளியில் வந்தனர் அனைவரையும் போல நான் அவர்களை நோக்கி விரைந்தேன்.சார் எப்படி இருக்கிறார் என்று அனைவரும் ஒரு சேர வினவினார்கள்.உதட்டை பிதுக்கிய பெரியவர் எண்களின் குரலை கேட்டு கண்ணீர் மட்டும் வடிக்கிறான்,உடலில் எந்தவொரு அசைவும் இல்லை.அவன் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் நமக்கு சிறிதேனும் நம்பிக்கை பிறக்கும் இல்லையெனில் அவன் ஆழ்ந்த கோமாவிற்கு சென்று விடுவான் பின்னர் எதுவும் நம் கையில் இல்லை என்றதும் அதுவரை அடக்கி வைத்திருந்த என் துக்கம் உடைந்தது. நான் கண்ணீரை அடக்க எவள்ளவு முயற்சித்தும் முடியாமல் அது புரண்டோடியது.
 
அன்று:

ஒரு பக்கம் மகிழ்ச்சியிருந்தாலும் அத்தனை எளிதில் நான் தோற்றுப்போகவும் தயாராகவில்லை. ஏனோ வெளியில் வரும் போது அவரின் புன்னகை எனக்கு வெற்றிபுன்னகை சிந்தியதாகவே தோன்றியது.எனக்கு குழப்பமே தோன்றியது.அவர் முதலாளி என்றால் நான் அவர் நினைத்தபடியெல்லாம் ஆட வேண்டுமா என்று என் மனம் என்னை தூண்டி விட்டது. அதே கணம் நீ இதை தானே விரும்பினாய் பின் ஏன் இந்த பிடிவாதம் உனக்கு என்றும் உளறியது.இதை சட்டை செய்யாமல் என்ன நீங்கள் இப்படி நான் வருவேன் என்று எப்படி சொன்னீர்கள் என்று உபதலைவரிடம் கடிந்தேன். அவரோ போங்க தம்பி நான் மட்டும் அப்படி சொல்ல வில்லையென்றால் என்னை ஒரு வழி பண்ணியிருப்பார் அவர் மேலும் நீங்கள் வருவதைத்தான் விரும்புவதாக தெரிகிறது. என்று சர்வ சாதாரணமாக .சொல்லிவிட்டு அகன்றார்.எனக்கு என்னவோ போல ஆகி விட்டது அவர் சொன்னதை கேட்க நன்றாக இருந்தாலும் இப்படியெல்லாம் அடுத்தவர்கள் யூகிக்கும் படி ஏன் இவர் நடந்து கொள்கிறார் என்று கோபம் வந்தது.மும்பை செல்லும் பொழுது அவரிடம் இதைபற்றி எச்சரிக்கவேண்டும் என்றெண்ணினேன். மனம் என்னை நோக்கி சிரித்தது ஸோ போவதாக முடிவு பண்ணி விட்டாய் அல்லவா என்று ஏளனம் செய்தது.ஏன் போனால் என்னவாம் நான் வேலை நிமித்தம் தான் செல்கிறேன் அவருடன் ஊர் சுற்ற அல்ல என்றேன். ஓஹோ அப்படி வேற ஆசை இருக்கிறதா நீ நடத்து மகராஜா என்று மீண்டும் தூண்டியது.இருக்கட்டும் ஆனாலும் அவரிடம் அவ்வளவு எளிதில் பணிந்து விட கூடாது. கடைசி வரை தவிக்க விட்டு பிறகு தான் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்ற என்னை நோக்கி நானே சிரித்துக்கொண்டேன்...
 
இன்று:

நான் எத்தனை அழைத்தும் கேட்காமல் என் அன்னை போய் விட்டார்களே என்று எனக்கு கண்ணீர் பீறிட்டு வந்தது.எனக்கு ஏன் என் அன்னையை நிறுத்த முடியவில்லை என்று கலங்கினேன்.ஒரு போதும் என் பெயரை தவிர வேறதுவும் சொல்லாத என் தந்தை கூட என்னை செல்லமாய் அழைத்ததை எண்ணியபொழுது ஆச்சர்யமே மிஞ்சியது.அவரின் கம்பீரமான குரலும், கூட என்னை அழைக்கும்பொழுது எத்தனை மிருதுவாய் கலங்கிய குரலில் இருந்தது. இவர்கள் எல்லாம் என் மீது இத்தனை பாசம் வைத்திருந்ததை இத்தனை நாள் நான் அறியாமல் போய்விட்டேனே என்று என் மீதே எனக்கு கோபம் வந்தது.ஒரு துயரமான நேரத்தில் தான் நம் மீது யார் யார் எத்தனை அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது இப்பொழுது புலனாகிறது என்பதை கண்டு கொண்டேன்.ஆனால் என்னை வளர்த்து ஆளாக்கிய என் அன்னையும்,தந்தையும் வந்தும் கூட என்னால் அவர்களின் குரலுக்கு என்னால் பதில் அளிக்க முடியாததை எண்ணி வியந்தேன். ஒரு வேளை அவன் வந்து அழைத்தால் நான் எப்படி உணர்வேன்.அவனை நினைத்ததுமே நான் ஏன் இப்படி மயங்குகிறேன். அவன் சொன்ன வார்த்தைக்கு பிறகுமா அவன் மேல் இந்த நேசம்.ஆனால் அவன் கண்டிப்பாக இங்கு தான் இருப்பான் அவனை அழைத்து என்னிடம் வந்து பேச சொல்லுங்கள் நான் விரும்பும் அந்த வார்த்தையை சொல்ல சொல்லுங்கள் பின் நான் திரைப்படங்களில் வருவது போல எழுந்து ஆடி ஓடி உங்களையெல்லாம் ஆச்சர்யபடுத்துவேன் என்று சொல்கிறேன் யாராவது கேட்டால் தானே...
 
அன்று:

வெற்றி புன்னகையுடன் இருந்த எனக்கு அவனின் குழப்பம் நிறைந்த முகம் ஒருவித யோசனையை தந்தாலும் வெற்றி மிதப்பில் மறந்து விட்டேன். அன்றைய இரவு முழுவதும் மும்பை பற்றிய என் கனவு பலிக்கபோவதை எண்ணி மகிழ்ந்து கொண்டே உறங்கிப்போனேன்.மறு நாள் காலை அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக காரியதரிசியை அழைத்து அவனை வந்து என்னை பார்க்க பணித்தேன்,சில நொடிகளில் திரும்பி வந்த காரியதரிசி சார் அவர் இன்றும் நாளையும் விடுமுறை எடுத்திருக்கிறாராம் என்று ஒரு குண்டை தலையில் போட்டு சென்றாள்.ஒரு கணம் என்னுடைய கனவுகள் அத்தனையும் என் கண் முன்னே சரிந்து விழுவதை கண்டேன்.நாளை மறுநாள் மும்பை பயணிக்க வேண்டிய நிலையில் அவன் இரண்டு தினங்கள் விடுமுறை என்றதும் எனக்கு மிகுந்த கோவமும் அதே நேரம் என்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த என்னுடைய சுயகௌரவமும் என்னை உசுப்பேத்தி விட்டது.இவன் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் அவன் மனதில், இவனை ஒரு வழி செய்கிறேன், நான் யார் என்பதை காட்டுகிறேன் என்று கறுவிக்கொண்டேன்.மேலாளரை அழைத்து உபதலைவரை வரச்சொன்னேன்,கடுங்கோபத்தில் இருந்த நான் வந்த உபதலைவரை அமரக்கூட சொல்லாமல் நாளை மறுநாள் மும்பையில் மீட்டிங் உங்கள் தலைவர் இரண்டு தினங்கள் விடுப்பு எடுத்து ஓடி விட்டார் ஆதலால் நீங்களும் மேலாளரும் போய் வாருங்கள் என்று கூறி நீங்கள் போகலாம் என்று ஆணையிட்டேன்.ஒரே கணத்தில் மேலாளரும் உபதலைவரும் திடுக்கிட்டு சார் என்றார்கள் ஒரு சேர. யூ மே கோ நொவ் என்று சொல்லி மடிக்கணினியில் வலுக்கட்டாயமாக பார்வையை செலுத்தினேன்.
சில நொடிகளில் மே ஐ கம் இன் என்று ஒரு ஒலி கேட்டது.......
 
இன்று:

என் கண்ணீரை கண்ட அருகில் இருந்த சிலர் எனக்கு ஆறுதல் கூறுவதாக எண்ணி என்னை மேலும் துன்புறுத்தினர்.நான் மெதுவாக தைரியத்தை வரவழைத்து பெரியவரிடம் சென்று சார்ஐ பார்க்க அனுமதிப்பார்களா என்று துணிந்து கேட்டு விட்டேன். ஒரு முறை புருவத்தை உயர்த்தியவரிடம் அருகில் இருந்த மேலாளர் நம் கம்பெனியின் யூனியன் தலைவர் என்றதோடு சார்க்கு நல்ல பழக்கம் இவரிடம் என்றார்.என்னை ஒரு பரிதாபப்பார்வை பார்த்த படியே தம்பி உள்ளே யாரையும் விட மாட்டார்கள் நீ போய் என்ன ஆக போகிறது என்ற ரீதியில் ஒரு அங்கலாய்ப்பும் அவரின் முகத்தில் தெரிந்தது. எனக்கு என்ன சொல்லி இவர்களை புரிய வைப்பது என்று தெரியவில்லை. சாரிடம் நான் போய் பேசினால் ஏதாவதொரு மாற்றம் தெரியும் இதை இவர்களுக்கு நான் எப்படி விளக்குவேன். 

நீ தானாப்பா அந்த யூனியன் லீடர் உன்னை பற்றி அவன் என்னிடம் நிறைய சொல்லியிருக்கான் என்று அவரின் அன்னை கூறியதும் மீண்டும் என் கண்ணில் கண்ணீர் படர்ந்தது.அதை கண்ட அவர் அழாதேப்பா எல்லாம் சரியாயிடும் என்று எனக்கு ஆறுதல் கூறியது அங்கிருந்தவர்களுக்கு விந்தையாக தோன்றியிருக்கும்.
 
அன்று:

அவரின் வெற்றி புன்னகை என்னை சிறிது சினம் கொள்ளவே செய்தது என்றாலும் நான் மனதளவில் மும்பைக்கு செல்ல தயாராகி விட்டேன்.ஆனால் நான் நினைத்த படி அத்தனை எளிதில் அவர் வெற்றியை சுவைக்கவும் கூடாது என்று எண்ணிக்கொண்டேன்.மதியத்திற்குள் பதில் சொல்ல வேறு சொல்லியிருக்கிறார்.என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டேயிருந்தேன் நல்ல வேளையாக என்னை அன்று முழுவதும் அழைக்கவில்லை.வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற எனக்கு ஒரு நல்ல வாய்ப்பும் கிட்டியது. என் தங்கையை பார்க்க ஒரு வரன் வந்ததாக அம்மா சொல்லவும் அதை பற்றி விசாரிக்க வெளியூர் செல்ல வேண்டும் என்றும் இரண்டு தினங்கள் லீவ் எடுக்கவும் வேண்டினர்.எனக்கும் சரியாகவே தோன்றியது மேலும் இந்த இரண்டு தினங்கள் அவரும் கொஞ்சம் தவிக்கட்டும் என்றும் எண்ணிக்கொண்டேன்.ஆனால் சனிக்கிழமையல்லவா மீட்டிங் என்று சொல்லியிருந்தார் அப்படியானால் நாளை போய் சொல்லி விடலாம் நான் வெள்ளி மாலை வந்து விடுவதாக ஆனால் அவர் விமானத்தில் செல்லலாம் நாம் ட்ரெயினில் போக வேண்டும் என்றால் என்ன செய்வது என்று யோசித்தேன்.எப்படியும் நாளை கிளம்புவதற்கு முன் அவரை நேரில் பார்த்து கேட்டு விடலாம் என்று எண்ணிக்கொண்டேன்.மறுநாள் காலையில் இரண்டு நாள் விடுமுறைக்கு தகவல் தெரிவித்து விட்டு சாவகாசமாக கிளம்பினேன்.நேராக அவரின் அறைக்கு சென்று மே ஐ கம் இன் என்றேன்.எஸ் ப்ளீஸ் என்று எரிச்சலான அவரின் அனுமதி கிடைத்தது. 
உள்ளே நுழைந்த என்னை அவர் பார்ப்பதில் இருந்த ஆச்சர்யம் கலந்த எரிச்சல் எனக்கு சிரிப்பை வரவழைத்துவிட்டது மெதுவாக சிரித்தும் விட்டேன்,அது அவரின் சினத்தை மேலும் அதிகரித்தது. என்னை உக்கிரமாக பார்த்த அவர் என்ன நினைத்ததை சத்தித்து விட்டோம் என்ற திமிரா என்றார். ஹலோ சார் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று ஒன்றும் அறியாததை போல கேட்டேன்.
 
இன்று:

என் அன்னையிடம் கூட அவனை பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேனே அவர்களாவது அவனை அழைத்து வரமாட்டார்களா என்று தோன்றியது. அவனின் ஆண்மை நிறைந்த அந்த குரலை கேட்கவேண்டும் போல் இருந்தது.எனக்கு தான் யாரையும் பார்க்க முடியவில்லையே.அவனின் குரலை கேட்டால் ஒரு வேளை என்னால் அனைவரையும் பார்க்க முடியுமோ என்னவோ? இது இவர்களுக்கு தான் புரிய மாட்டேன்கிறது.வெளியில் அவன் நின்றால் அவனுக்குத்தான் என்னை பற்றி நன்றாக தெரியுமே அவன் ஏதாவது முயற்சி எடுக்கிறானோ? பாவம் அவன் என்ன செய்வான்? அவனிடம் எத்தனை முறை கூறினேன்.அப்பொழுதெல்லாம் செவிசாய்க்கவில்லையே இப்பொழுது மட்டும் புதிதாக என்ன செய்து விட போகிறான்.மருத்துவ நெடி என் நாசியை அடைக்கிறது.மீண்டும் பல பல குரல்கள் ஒன்றும் விளங்கவில்லை.நான் ஏதோ ஒரு உலகத்தில் இருப்பதை போன்ற உணர்வு.......
 
அன்று:

ஒரு நொடி அவனின் குரலாக இருக்குமோ என்ற ஐயம் இருந்தது.இருப்பினும் கொண்டிருந்த கோவத்தில் எஸ் ப்ளீஸ் என்று எரிச்சலான குரலில் அனுமதி அளித்தேன்.
வந்தது அவன் தான்.இன்று சீருடையில் இல்லாமல் மிக அழகாக கவர்ச்சியாய் வெளிர் நீலத்தில் ஒரு டீ ஷர்ட்டும் கடும் நீலத்தில் ஜீன்ஸும் அணிந்து வந்திருந்தான்.திண்ணென்ற அவனின் மார்பும் அதை ஒட்டிப்பிடித்தாற் போன்ற அவனின் டீ ஷர்ட்டும் அதற்கு மிகப்பொருத்தமான ஜீன்ஸும் அவனை ஒரு தலைசிறந்த மாடல் போன்ற உருவத்தை அளித்திருந்தது.ஒரு நிமிடம் என் இமைகள் மூட மறந்தது என் ஏக்க பெருமூச்சை மிகவும் கட்டுபடுத்தி வெளிவராமல் செய்தேன்.என் ஆச்சர்யம் கலந்த பார்வை அவனை சிரிக்க வைத்து விட்டது போலும் என்னை பார்த்து க்ளுக் என சிறிது விட்டான்.எனக்கு கோவம் தலைக்கேறியது அவனை உக்கிரமாக பார்த்து என்ன நினைத்ததை சாதித்து விட்டோம் என்ற திமிரா என்றேன். ஹலோ சார் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று ஒன்றும் அறியாததை போல கேட்டான்.முதன்முறையாக அவனை பெயர் சொல்லி அழைத்தேன். நீ உன் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்றேன்.அவனிடம் இருந்து ஒரு அழகான புன்னகை வெளிப்பட்டது.மனதில் நினைப்பதைஎல்லாம் சொல்லிவிட முடியுமா சார் என்று ஒரு மார்க்கமாக பதில் அளித்தான்.எனக்கு இருப்பு கொள்ளவில்லை எங்கே நான் என் கண்ட்ரோலை இழந்து விடுவேனோ என்று பயந்தேன்.அப்பொழுது தான் அவனை இது வரை அமரச்சொல்லவில்லை என்பது உரைத்தது.ப்ளீஸ் டேக் யுவர் சீட் என்றேன். தேன்க் யூ என்றவாறே அமர்ந்தான்.அவனை பார்க்கும் போதெல்லாம் என் கோபமும் நிதானமும் ஏன் தவறுகிறது என்பது புரியவில்லை.இரண்டு தினங்கள் விடுப்பு எடுத்தது எனக்கு தெரிவித்தாகி விட்டது அதற்கு தான் வந்தீர்கள் என்றால் நீங்கள் போகலாம் என்றேன். அப்பொழுது நாம் மும்பை போக வில்லையா சார் என்றான்? அவனின் வழக்கமான ஆண்மை நிறைந்த குரல் இன்று கவர்ச்சி கலந்து சொன்ன விதம் என்னை நிலைகுலைய வைத்தது. சில மணித்துளிகளுக்கு முன் சுக்குநூறான என் கோட்டை மீண்டும் என் முன்னே விஸ்வரூபம் எடுத்து நின்றது. 
 
 
- தொடரும்
 
தனியாக தவிக்கின்றேன் - Part 2 - Tamil Gay Sex Story (http://otgblg.blogspot.com)
இல் இதன் மிகுதியை வாசிக்கவும்.

1 comment:

  1. Any unmarried girl in Chennai interested in sex can reach me at suresh40hot at gmail for safe sex.

    ReplyDelete