Note: Allowing "Post on this blog via Email" service to the public, went out of control. Because of that This blog is not longer managed. Now it is fully opened for public without any limitations. Anyone can post anything on this blog by sending their post as an email to this blog's email. If you want to remove this blog or its blog posts please contact google or blogger.com with valid reason.

விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா ? - Washing and Ironing Dress Guide

நடுத்தர மக்களும் அதற்கு மேல் உள்ளவர்களும், மிகவும் உயர்தரமான ஆடை வாங்கி உபயோகிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இது சமூகத்தில் தன்னை ஒரு அந்தஸ்தில் நிலை நிறுத்தி கொள்ள தேவைப்படுகிறது என்ற காரணத்தாலும், ஆசைக்காகவும், நிறைய பணம் இருப்பவர்கள் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி காண்பிக்கவும் வாங்கி குவிக்கின்றனர்.
 
நானும் இவ்வாறு செய்துள்ளேன். தற்போது அதிகம் செய்வதில்லை.
இவ்வாறு வாங்கும் விலை உயர்ந்த ஆடைகளை பராமரிப்பதற்க்கு தனி கவனம் தேவை. அதை எப்படி சுத்தம் செய்வது என்ற குறிப்பை ஆடையில் சிறு துணி இனைத்து எழுதியிருப்பார்கள். அதை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் அதில் எழுதியிருப்பதை போல அந்த ஆடையை கையான்டிருப்பார்களா என்பது கேள்வி குறி.
அந்த ஆடையில் குறிப்பிட்டிருப்பதை போல அதை பராமரித்தான தான் அதன் தன்மை நீடித்திருக்கும்.
 
அதில் என்ன எழுதியிருக்கிறது என்று பாருங்கள்

மிருதுவான சலவை தூள் - Use Mild Detergents
எனக்கு தெரிந்து மிருதுவான கடினமான சலவை தூள் அல்லது சலவை கட்டி இருக்கிறதா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் நாம் அவ்வாறு தேர்ந்தெடுத்து வாங்குவதில்லை. நடிகர் நடிகைகள் எந்த பொருளுக்கு விளம்பரம் செய்கிறார்களோ அதை வாங்குகிறோம். மேலும், அந்த கறை இந்த கறை எந்த கறையாக இருந்தாலும் போய்விடும் என்கிறார்கள். கறை நீக்கப்பட துணியை காண்பிக்கிறார்கள். விளம்பரத்தின் கீழே கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு சிறிய எழுத்துக்களில் இது creative visualisation கற்பனையாக சித்தரிக்கப்பட்டது என்று எழுதியுள்ளனர். ஒவ்வொரு முறை விளம்பரம் பார்க்கும் போதும், அதில் உள்ளவர்களை பார்த்து, வா, வந்து என் வீட்டில் துவைத்து காட்டு என்று புலம்புவது என் வாடிக்கை.
 
மேலும், துணிகளை வெண்மையாக்க என்று ஒரு பொருள் வருகிறது. அதை அறிமுகம் படுத்தும் போது இலவசமாக கொடுத்தார்கள். அதை உபயோகிக்கும்படி மனைவியிடம் கூறினேன். இது புதுசு. எப்படியிருக்குமோ என உபயோகிக்க மறுத்துவிட்டாள். பின்பு தொடச்சியான விளம்பரங்களுக்கு பிறகு அது விலைக்கு விற்க்கப்பட்டது. இப்போது அதை என் மனைவி வாங்கி உபயோகப்படுத்துகிறாள். இலவசமாக கொடுத்தால் நல்ல பொருளா என்று சந்தேகம் வருகிறது. விலை அதிகமாக இருந்தால் அது தரமான பொருள் என்று நினைக்கிறார்கள். 
 
மொத்தத்தில் கடினமான மிருதுவான சலவை தூள் அல்லது சலவை கட்டி என்று கிடையாது.
 
வெளுக்க வேண்டாம் - Do not Bleach
வெளுக்க வேண்டாம் என்பதன் பொருள் சலவைகாரனிடம் கொடுத்து வெள்ளாவி வைத்து வெளுக்க வேண்டாம் என்பது. ஆனால், சலவை கடையில் கொடுக்கும் போது, இவ்வாறு வெளுக்க வேண்டாம் என்று நாம் சொல்வதில்லை. பொதுவாக இப்பொதெல்லாம் Dry Cleaning  உலர் நிலையில் சுத்தப்படுத்துதல் – அதாவது துணியை தண்ணியில் முக்கி சலவை தூள் மூலம் சுத்தப்படுத்தாமல், உலர் நிலையிலேயே சுத்தப்படுத்துதல். 
இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். சலவைக்காரர்கள் துணி துவைக்கும் முறையை பார்த்தால் கண்களில் நீர் வந்து விடும். காய்ந்து போன ஆற்றில் தேங்கி நிற்கும் குட்டை நேரில் தோய்த்து அதிலேயே அலசி, காய வைத்து, இஸ்திரி செய்து கொடுப்பார்கள். அதனால், தோல் நோயகள் ஏற்ப்பட வாய்புண்டு. அதனால் தான் இந்த dry cleaning  முறை கொண்டு வரப்பட்டது.
 
மிதமான இஸ்திரி - Warm Iron
துணி துவைத்த பிறகு வீட்டில் இஸ்திரி போடும் போது, இஸ்திரி பெட்டியில் குறிப்பிட்டுள்ள படி துணி வகைகளுக்கு ஏற்ப வெப்பத்தை கூட்டுவது குறைப்பது கிடையாது. பட்டுப்புடவை, நமது கோட் சூட் இஸ்திரி போடும் போது சற்று கவனம் செலுத்துகிறோம். மற்றப்படி அனைத்து துணிகளுக்கும் ஒரே சூட்டில் தான் இஸ்திரி செய்கிறோம்.
 
நிழலில் உலர வைக்கவும் - Dry in shade
இதை நாம் நிச்சியமாக செய்வதில்லை. சீக்கிரம் காய வேண்டும் என்பதற்க்காக வெய்யிலில் தான் காய வைக்கிறோம். நிழலில் காய வைப்பதில்லை.
 
கசக்கி பிழிய  வேண்டாம் - Do not Wrinkle
இப்போது துணிகளை கசக்கி பிழிவது குறைந்துள்ளது. பொதுவாக இயந்திரத்தில் துவைப்பதால், அரை குறையாக அதுவே உலர்த்தி கொடுப்பதால் பிழிய வேண்டிய அவசியம் ஏற்ப்படுவதில்லை. ஆனால், வேலைக்காரிகள் துணி துவைத்தால் கசக்கி பிழிகிறார்கள்.
பெண்கள் குறிபாக மனைவிகள் எந்த விதிமுறைகளையும் பயன் படுத்துவதில்லை. ஆனால், எல்லோரும் இப்பொதெல்லாம் தரமான துணிகள் வருவதில்லை. நம்மிடமிருந்து காசை கொள்ளையடிக்கிறார்கள் என்று புலம்புகிறோம்.
நமக்காக நாமே நமது வீட்டிலேயே விதி முறைகளை பின்பற்றி வேலை செய்வதில்லை. ஆனால், பிறர் விதிமுறைகளை பின்பற்றாத போது அவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தி நீதிபதிகள் ஆகி விடுகிறோம்.
மனைவிகள் துணிகளை மட்டுமல்ல கணவர்களையும் இவ்வாறு தான் கையாள வேண்டும்.
இதமான  திட்டுடன், மிதமான சூட்டுடன், போட்டு வெளுக்காமல், வீட்டுக்கு உள்ளே கசக்கி பிழியாமல் கணவனை கையாள வேண்டும். ஆனால், யாரும் அப்படி செய்வதில்லை.
இனிமேலாவது நீங்கள் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா

No comments:

Post a Comment